Vijay Sethupathi: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை – ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathis Interesting Food Habits: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகராக கலக்கிவருபவர் விஜய்சேதுபதி. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில், அவருக்கு எப்போதும் டயட் மீது நம்பிக்கை இல்லை என்றும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Vijay Sethupathi: எனக்கு அதன் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை - ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

Published: 

24 Jan 2026 08:30 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருகிறது.அந்த விதத்தில் தெலுங்கில் வில்லனாக மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்த இவர், கதாநாயகனாக ஸ்லம் டாக் (Slum Dog) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கியுள்ள நிலையில், ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்த படங்களை தொடர்ந்து புது புது படங்களிலும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகிவருகிறார். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி வேடங்களில் நடித்துவருகிறார்.

அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த விஜய் சேதுபதி, அதில் “அவருக்கு ஒருபோதும் டயட் என்ற கருத்தின் மீது ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும், அதற்கானக் காரணத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்- ரசிகருக்கு தக்க பதிலளித்த சூரி!

டயட் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி, “எனக்கு எப்போதும் டயட் என்ற கருத்தின் மீது நம்பிக்கை இருந்ததில்லை. எனக்கு ருசியான உணவுகளை சாப்பிடுவதும் மிகவும் பிடிக்கும். நான் ருசியான உணவுகளை சாப்பிடவில்லை என்றால், எனது வாழ்க்கையும் ஜாலியாக இருக்காது என்பதை நம்புவேன். அதன் காரணமாகவே எனக்கு ருசியான உணவுகளை சாப்பிடுவது ரொம்பவே புடிக்கும். எனக்கு சிக்ஸ்பேக் என்று ஒன்று இருக்கவேண்டும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனென்றால் நான் ஒரு சாதாரண மனிதன்தான்.

இதையும் படிங்க: அங்க நான் தப்பு பண்ணிட்டேன்.. மொத்தம் 84 டேக் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

அதனால் ஒவ்வொரு வருடமும் மாதம் ஒருமுறை ஒரு சத்தியம் செய்துகொள்கிறேன், இந்த மாதமாவது அதை செய்துவிடவேண்டும் என, யாரவது சொன்னால் நான் ஒருவாரம் ஜிம்முக்கு போவேன். ஆனால் அதை தொடர்ந்து, போவேன் என்பது எனக்கு தெரியாது. நான் அதை ஒருவாரத்தில் நிறுத்திவிடுவேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

விஜய் சேதுபதியின் தெலுங்கு அறிமுக படம் குறித்து வெளியான பதிவு :

இந்த 2026ம் ஆண்டி விஜய் சேதுபதியின் நடிப்பில் முதலில் வெளியாகவுள்ள படம்தான் காந்தி டால்க்ஸ். இப்படம் தயாராகி 2 வருடத்தை கடந்த நிலையில், இந்த 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியில் வெளியாகிறது. இப்படமானது பல வருடங்களுக்கு பின் தமிழில் வெளியாகும் ஒரு மௌன திரைப்படமாகும். இதில் வசனங்கள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..