Vijay Sethupathi : கலாட்டா மேக்ஸ்.. விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது!
Ace Movie Trailer Update : சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. அவ்வாறு இருந்து தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் ரிலிருக்கு காத்திருக்கும் படம் ஏஸ். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் ருக்மிணி வசந்த்
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் தெலுங்கில் புதிய திரைப்படத்தில் முன்னணி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழிலும் இவரின் நடிப்பில் வரிசையாக 4 படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது. அதில் ஒரு படம்தான் ஏஸ் (ACE). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியுள்ளார். இவர் இந்த படத்திற்கு முன் நடிகர் விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தகு இயக்கியிருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் இந்த ஏஸ் படத்தில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தை 7சிஎஸ் எண்டெர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்துள்ளது.
இந்த படத்தின் டீசரானது விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வரும் 2025, மே 23ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, மே 11ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
The GALATTA MAXX trailer of #ACE movie trailer drops this May 11th🔥#ACETrailer #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir… pic.twitter.com/NXGUH6Zbqv
— VijaySethupathi (@VijaySethuOffl) May 9, 2025
இந்த ஏஸ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இவர் புகழ் பெற்ற கன்னட நடிகையாவார். இவர் மேலும் தமிழில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் யோகி பாபுவின் லேடி கெட்அப் புகைப்படத்தை ஏஸ் படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வந்தது. அதை தொடர்ந்து இந்த படத்தில் யோகி பாபுவும் மிக முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் இருந்து வெளியாகிய “உருகுது உருகுது” என்ற பாடலானது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மட்டும் தமிழில், காந்தி டால்க்ஸ், ட்ரெயின் மற்றும் தலைவன் தலைவி என மூன்று படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. அதிலும் தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படமும் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.