Gandhi Talks: வித்தியாசமான கதையில்… விஜய் சேதுபதி – அரவிந்த் சுவாமியின் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் டீசர் இதோ!

Gandhi Talks Movie Teaser: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னே தயாரான படம்தான் காந்தி டாக்ஸ். தற்போது இந்த படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Gandhi Talks: வித்தியாசமான கதையில்... விஜய் சேதுபதி - அரவிந்த் சுவாமியின் காந்தி டாக்ஸ் படத்தின் டீசர் இதோ!

காந்தி டாக்ஸ் டீசர்

Published: 

03 Jan 2026 14:17 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. தெலுங்கு மொழியில் முக்கிய வேடத்தில் மட்டும் நடித்துவந்த விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த படங்களுக்கு எல்லாம் முன்பே விஜய் சேதுபதி நடித்திருந்த படம்தான் காந்தி டாக்ஸ் (Gandhi Talks). இந்த இப்படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் அதிதி ராவ் (Aditi Rao), அரவிந்த் சுவாமி (Aravind Swamy) மற்றும் சித்தார்த் ஜாதவ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது பணத்தின் முக்கியத்தை மையமாக கொண்டும், காந்தியின் பொன்மொழிகளை அடிப்படையாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது முற்றிலும் வசனங்களே இல்லாத படமாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR.Rahman) இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ராவண மவன்டா’.. ரசிகர்கள் கொண்டாடும் ஜன நாயகன் பட 4வது பாடல் வெளியானது!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட காந்தி டாக்ஸ் பட டீசர்

காந்தி டாக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி :

இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே தேசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. பின் இப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த காந்தி டாக்ஸ் படமானது வரும் 2026 ஜனவரி 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது முற்றிலும் வசனமே இல்லாத படம் என கூறப்படும் நிலையில், அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெக்ஸ்ட் டார்கெட் குழந்தைகள்தான்.. குரங்கை மையப்படுத்தி படம் எடுக்கவுள்ளேன்- இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

விரைவில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியின் கைவசத்தில் கிட்டத்தட்ட 4 படங்களுக்கும் மேல் உள்ளது. அதில், தெலுங்கில் உருவாகியுள்ள புது படமும் இந்த 2026ல் ஆண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

குங்குமம் இல்லாததால் தடைபட்ட திருமனம்... - சில நிமிடங்களில் டெலிவரி செய்த பிளிங்கிட் டெலிவரி உழியர்
அமேசான் காடுகளில் இருக்கும் கொட்டாத தேனீக்கள்.. ஏன் இது முக்கியத்துவம் வாய்த்ததாக உள்ளது?
போர்ச்சுகலில் ஹனிமூன் கொண்டாடும் சமந்தா – ராஜ் நிதிமோறு..
வ்ருஷபா படத்தின் 7 நாள் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?