எங்களை யாராலும் தடுக்க முடியாது… கிங்டம் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா அதிரடி!
Kingdom Trailer Launch Highlights : கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் வருகிற ஜூலை 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்திருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா திருப்பதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) நடித்துள்ள கிங்கடம் (Kingdom) திரைப்படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியிருக்கிறார். ஜெர்சி (Jersey) படத்துக்கு பிறகு இவர் இயக்கியுள்ள படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். கிங்டம் திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்திய கிங்டம் டிரெய்லர் வெளியீட்டு விழை ஜூலை 26, 2025 அன்று திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய விஜய் தேவரகொண்டா, சித்தூர் உச்சரிப்பில் பேசி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பேசிய அவர், இந்த முறை படத்தின் வெளியீட்டுக்கு முன் நேரடியாக உங்கள் முன் வந்திருக்கிறோம். கடந்த வருடத்திலிருந்து அந்தப் படத்தைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, ஒரே ஒரு விஷயம் மட்டும் என் மனதில் நிழலாடுகிறது.
இதையும் படிக்க : Kingdom : டிக்கெட் முன்பதிவில் சாதனை.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்துக்கு அமோக வரவேற்பு!
நம்ம திருப்பதி வெங்கடாஜலபதி என்னோட இருந்திருந்தா.. நான் ரொம்ப பெரிய ஆளா ஆகியிருப்பேன்.. நான் போய் மேலே உட்கார்ந்திருப்பேன்.. எப்பவும் போல இந்தப் படத்துக்காக நான் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கேன்.. இப்போ மிச்சம் திருப்பதி வெங்கடாசலபதியின் அருளும் உங்க எல்லா ஆசீர்வாதங்களும்தான்.. நம்மை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் நான்கு நாட்களில் படம் வெளியாகிவிடும். ஏழு மலைகளை உடையவனே! வெங்கடாசலபதி, என்னைப் பார்த்துக் கொள்” என்று பேசியிருக்கிறார்.
வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் பேச்சு
Aapedheleeeee…. 🤙🏻🤙🏻#Kingdom #KingdomTrailer pic.twitter.com/8Le7CLegqa
— KINGDOM (@KINGDOM_Offl) July 26, 2025
இதையும் படிக்க : Vijay Deverakonda: சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!
இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து சத்யதேவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் ஏற்கனவே தணிக்கை முடிந்து ரிலீஸிற்கு காத்திருக்கிறது. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். விஜய் தேவரொண்டாவுக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களைக் கவரும் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் அனிருத்தின் பாடல்களும் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.