Kingdom : தொடரும் வசூல் வேட்டை.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட 2வது நாள் வசூல் விவரம் இதோ!

Kingdom Movie 2nd Day Box Office Collection : நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆக்ஷ்ன் நடிப்பில் பான் இந்தியப் படமாக வெளியாகியிருப்பது கிங்டம். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது 2வது நாள் முடிவில், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்துப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Kingdom : தொடரும் வசூல் வேட்டை..  விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட 2வது நாள் வசூல் விவரம் இதோ!

கிங்டம் திரைப்படம்

Published: 

02 Aug 2025 14:35 PM

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri). இவரின் இயக்கத்தில் வெளியாகி, உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றவரும் திரைப்படம் கிங்டம் (Kingdom). இந்த கிங்டம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) நடித்துள்ளார். இவரின் 12வது திரைப்படமாக வெளியாகியுள்ள இந்த கிங்டம் படமானது, ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது. பான் இந்திய மொழிகளில் கடந்த 2025, ஜூலை 31ம் தேதி முதல் இப்படமானது வெளியாகியிருந்தது. முதல் நாள் முடிவில் சுமார் ரூ. 39 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. உலகளாவிய வரவேற்பைப் பெற்று இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) ஜோடி முதன் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது வெளியாகி 2 நாட்களைக் கடந்த நிலையில், உலக அளவில் மொத்தம் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது தெரியுமா ?, இப்படமானது இதுவரை சுமார் ரூ 53 கோடிகளை வசூல் செய்து பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

கிங்டம் படத்தின் 2வது நாள் வசூல் குறித்துப் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

தமிழகத்தில் கிங்டம் படத்தின் வரவேற்பு

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் பான் இந்தியப் படமாக இப்படம் வெளியாகியுள்ளது. கடந்த 2025, ஜூலை 31ம் தேதியில் காலை 8 மணி காட்சிகளுடன் இப்படமானது தமிழகத்தில் வெளியானது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான மற்ற திரைப்படங்களை விடவும், இந்த கிங்டம் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறலாம். விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் கதைக்களத்துடன் வெளியாகியுள்ள நிலையில், சூப்பர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?

மேலும் இப்படத்தின் கதை சாயல் கொஞ்சம், சூர்யாவின் ரெட்ரோ படத்தை போல் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி தமிழ் இசையமைப்பாளர் அனிருத் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இவரின் இசையமைப்பில் இப்படமானது மிக அதிக ஈர்ப்புகளைப் பெற்றுள்ளது என்றே கூறலாம். மேலும் இப்படம் இதுவரை உலகளாவிய வசூலில் சுமார் ரூ 53 கோடிகளை வசூல் செய்துள்ள நிலையில், இந்த வார இறுதிக்கு சுமார் ரூ 100 கோடியை வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.