விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Vijay Devarakonda Hospitalized : டெங்கு காய்ச்சல் காரணமாக, நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். விரைவில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் தேவரகொண்டா

Updated On: 

17 Jul 2025 22:40 PM

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் (Vijay Devarakonda Hospitalized) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, டெங்கு காய்ச்சல் காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிங்டம் திரைப்படத்தின் புரோமோஷன் பணியில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டிருந்தபோது, திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. விஜய் தேவரகொண்டோ, பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் நடித்துள்ள படம் கிங்டம். இந்த படத்தை கவுதம் தின்னனுரி என்பவர் இயக்கி உள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.  இந்த படம் 2025 ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு தேதி மூன்று தள்ளி வைக்கப்பட்டது.  முதலில், 2025 மார்ச் மாதம் கிங்டம் படம் வெளியானது என அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால், 2025 மே மாதம் என தள்ளிவைக்கப்பட்டது.

Also Read : ‘பென்ஸ்’ பட நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு!

கிங்டம் படம்


அதன்பிறகும், 2025 ஜூலை 4ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினமும் படம் வெளியாகவில்லை. இறுதியாக, 2025 ஜூலை 31ஆம் தேதி கிங்டம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது படத்தின் ரிலீஸ் குறித்த தேதியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், கிங்டன் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய தேவரகொண்டா உள்ளிட்டோர் புரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Also Read : ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?

இப்படியான  சூழ்நிலையில், படம் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே  உள்ளது. இப்படியான சூழலில், விஜய தேவரகொண்டாவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது, அவரது ரசிர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், அவர் கிங்டம் படத்தின்  வெளியீட்டிற்கு முன்பாக அவர் குணமடைய வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.