விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Kingdom Movie OTT Update: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கிங்டம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா (Actor Vijay Devarakonda). இவர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் கிங்டம். படத்தின் வெளியீடு தொடந்து தள்ளிப்போனது அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து படம் இறுதியாக கடந்த 31-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னுரி எழுதி இயக்கி இருந்தார். இவர் முன்னதாக நடிகர் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெர்சி படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் சத்யதேவ், கோத்தலா பானு, பாக்யஸ்ரீ போர்ஸ், வெங்கடேஷ் வி.பி., பூமி ஷெட்டி, மணீஷ் சவுதாரி, ஐயப்ப பி.சர்மா, கோபராஜு ரமணா, ரோகினி, முரளிதர் கவுட், பாபுராஜ், மகேஷ் அச்சந்தா, ராஜ்குமார் காசிரெட்டி, அஜித் கோஷி, ரவி கிருஷ்ணா, காஞ்சரபாலம் கிஷோர், அபய் பெத்திகண்டி, கேசவ் தீபக், ஸ்ரவன் என பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் கிங்டம் படம்:
ஸ்பை த்ரில்லர் ஆக்ஷன் படமாக வெளியான இந்த கிங்கடம் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின் 27-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகளில் படத்தைப் பார்க்காதவர்கள் ஓடிடி வெளியீட்டிற்கு காத்திருந்த நிலையில் இந்த செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… நார்த் அமெரிக்காவில் வசூலில் புதிய வரலாறு படைத்த கூலி படம்!
கிங்டம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
In the kingdom of gold, blood and fire… a new king rises from the ashes 👑🔥
Watch #Kingdom on Netflix, in Telugu, Tamil, Kannada, Malayalam and as #Saamrajya in Hindi from 27th August! ❤️🔥@TheDeverakonda @anirudhofficial @gowtam19 @ActorSatyaDev #BhagyashriBorse @Venkitesh_VP… pic.twitter.com/l0e4zBry3S
— Sithara Entertainments (@SitharaEnts) August 25, 2025
Also Read… ஆக்ஷன் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்… ஆண்டனி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?