மங்காத்தா படத்தில் இருந்து BTS புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு
Mankatha Movie BTS Photos: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மங்காத்தா. இந்தப் படத்தை தற்போது படக்குழு மீண்டு திரையரங்குளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மங்காத்தா படக்குழு
தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் திரையங்குகளில் மீண்டும் வெளியிடப்படுகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் குமார் என அனைவரின் படங்களும் தொடர்ந்து ரீ ரிலீஸாகிறது. அப்படி ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ரீ ரிலீஸான படங்கள் புதிதாக ரிலீஸான படங்களைவிட வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான கில்லி மற்றும் படையப்பா ஆகியப் படங்கள் வசூலில் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டும் புதுப் படங்கள் வரிசையாக வெளியாக காத்திருந்தாலும் ரீ ரிலீஸாகும் படங்களும் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து புதுப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. மேலும் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் தற்போது மீண்டும் ரீ ரிலீஸாக உள்ளது. அதன்படி வருகின்ற 23-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மங்காத்தா படம் ரீ ரிலீஸாக உள்ளது.
மங்காத்தா படத்திலிருந்து வெளியானது BTS புகைப்படங்கள்:
இந்த நிலையில் இந்த மங்காத்தா படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் உடன் எடுத்த புகைப் படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டு இருந்தார். மேலும் நாங்கள் மீண்டும் வருகிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஷால் – சுந்தர் சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக், புரோமோ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We coming again!! #MankathaReRelease #Thala50 #aVPgame from 23rd Jan in a theatre near u❤️❤️🔥🔥🙏🏽🙏🏽 pic.twitter.com/6aH97IeDf0
— venkat prabhu (@vp_offl) January 19, 2026
Also Read… 47-வது படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்