நடிகர்கள் ஃபகத் பாசில் – வடிவேலு நடிப்பில் வெளியானது மாரீசன் பட டீசர்

Maareesan - Official Teaser | முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கதில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவரும் இணைந்து நடித்து இருந்த நிலையில் தற்போது மாரீசன் படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ஃபகத் பாசில் - வடிவேலு நடிப்பில் வெளியானது மாரீசன் பட டீசர்

ஃபகத் பாசில் - வடிவேலு

Published: 

04 Jun 2025 17:27 PM

நடிகர்கள் ஃபகத் பாசில் (Fahadh Faasil) மற்றும் வடிவேலு (Vadivelu) இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் மாரீசன். இந்தப் படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து உள்ளார். மேலும் வித்யாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த மாரீசன் படத்தின் டீசர் தற்போது உருவாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

கவனம் பெறும் மாரீசன் படத்தின் டீசர்:

மாரீசன் படத்தின் டீசர் தொடங்கியதுமே ஹெலிஹாப்டர் ஷாட்டுடன் சில விநாடி காட்சிகள் காட்டப்படுகின்றது. மேலும் அந்த காட்சியில் அந்த ஊரின் அழகும் செழிப்பும் காட்டப்படுகிறது. அந்த சாட் மெல்ல மெல்ல கீழே இறங்குகிறது. பின்னணி இசையில் ஆஹா இன்ப நிலாவினிலே என்ற பாடல் இசைக்கிறது.

நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பாடல் மெல்ல மெல்ல ஆக்ரோசமாக மாறுவது போல ஒலிக்கிறது. அதே வேலையில் இங்கு படத்தில் காட்சிகளும் எதோ பிரச்னைகள் நிறைந்தவாறு காட்டப்படுகின்றது. முற்றிலும் வித்யாசமான கதைகளத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாரீசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மாமன்னன் படத்திற்கு பிறகு இணைந்த வடிவேலு – ஃபகத் பாசில் கூட்டணி:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். இந்தப் படத்தில் நடிகர்கள் ஃபகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக மிரட்டி இருப்பார். இந்த படத்திற்கு பிறகு ஃபகத் பாசில் தமிழகத்தில் அதிக ரசிகர்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.