கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
Vaa Vaathiyaar Movie : நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வா வாத்தியார்
நடிகர் கார்த்தியின் (Actor Karthi) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மெய்யழகன். ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தென்னிந்திய சினிமா ரசிகர்கலிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி வா வாத்தியார், சர்தார் 2, மார்ஷல் என தொடர்ந்து படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து எந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வா வாத்தியார் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த வா வாத்தியர் படத்தை இயக்குநர் நலம் குமாரசாமி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் காதலும் கடந்து போகும், குட்டி ஸ்டோரி ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்தியின் வா வாத்தியார் படத்தை இயக்கி வருகிறார்.
டிசம்பரில் வெளியாகும் வா வாத்தியார் படம்:
ஆக்சன் காமெடி படமாக உருவாகி வரும் இந்த வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், வடிவுக்கரசி, மதுர் மிட்டல் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
Also Read… கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Swag Master locks the date! 💥#VaaVaathiyaar storms into theatres on December 05, 2025🔥
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical #VaaVaathiyaarOnDec5@Karthi_Offl @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj… pic.twitter.com/qXI2wC1b92— Studio Green (@StudioGreen2) October 8, 2025
Also Read… வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது