சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசனின் பட அறிவிப்பு எப்போது? – சர்ப்ரைஸாக வெளியான வீடியோ
SK 26 Movie Update : தமிழில் பிரபல நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் புது படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன்
தமிழில் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைபடபடம் பராசக்தி (Parasakthi) . இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார். இந்த படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்கத்தில் படத்தில் இணையவுள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற படத்தை இயக்கியிருக்கும் நிலையில், இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார். இந்நிலையில் இப்படமானது கிராமத்து பின்னணியில் உருவாகவுள்ளதாம்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கவுள்ளார் தெரியும்?. துல்கர் சல்மானின் காந்தா (Kaantha) படத்தில் நடித்த தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி வரும் 2026 பிப்ரவரி 15ம் தேதியில் மாலை 06:01 மாலியளவில் வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: வித் லவ் படத்திற்காக அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்துப் பாராட்டிய விஜய் தேவரகொண்டா
சிவகார்த்திகேயன்- சிவகுமார் முருகேசன் படம் குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீடியோ :
After Glory, Comes Greatness#OneMoreTime#KamalHaasan @RKFI #Mahendran @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/dRccNuQMTt
— Raaj Kamal Films International (@RKFI) February 14, 2026
இந்த புது படமானது தற்காலிகமாக ரசிகர்களால் SK26 என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மதுரை கிராம பின்னணியில், திருவிழா மற்றும் காவல்துறை போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் லீட் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க ஒரு காதலர் தின வாழ்த்து… வெளியானது டிசி படத்தின் கிளிம்ஸ் வீடியோ
இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ள நிலையில், யார் இசையமைக்கிறார் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தின் புரோமோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் அறிவிப்புக்களை வெளியாகியுள்ள நிலையில், நாளை 2026 பிப்ரவரி 15ம் தேதியில் இப்படம் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.