Trisha Krishnan: தமிழக முதல்வராக பதவியேற்கும் விஜய்.. விழாவில் கலந்துகொண்ட நடிகை திரிஷா!

Trisha Attends Thalapathy Vijay CM Ceremony: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இன்று ஞாயிற்றுகிழமை 2026 மே 10ம் தேதியில், தளபதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நடிகை திரிஷா தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Trisha Krishnan: தமிழக முதல்வராக பதவியேற்கும் விஜய்.. விழாவில் கலந்துகொண்ட நடிகை திரிஷா!

விஜய் முதல்வராகவும் விழாவில் திரிஷா

Updated On: 

10 May 2026 09:44 AM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, தற்போது தவெக கட்சி தலைவராகவும் (TVK Party) மேலும் தமிழகத்தின் முதல்வராகவும் பங்கேற்கவுள்ளவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இன்று 2026 மே 10ம் தேதியில் சென்னையில் உள்ள நேரு உள் அரங்கத்தில், முதலமைச்சராக பங்கேற்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், அதில் பலவாறு அரசியல் பிரமுகர்கள், அமைச்சராக பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் தளபதி விஜய்யின் குடும்பத்தினர்கள் பங்கேற்கும் நிலையில், பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சில் நடிகை திரிஷாவும் பங்கேற்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகை திரிஷா (Trisha) தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை திரிஷா சேலையில் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். அந்த விழாவில் தனது தாயுடன் நடிகை திரிஷா கலந்துக்கொண்ட வீடியோ இணையத்திலும், தளபதி ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகிவருகிறது. மேலும் பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

விஜய் முதலமைச்சர் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள புறப்பட்ட திரிஷா:

நடிகை திரிஷா மற்றும் தளபதி விஜய் இருவருமே இணைந்து சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். மேலும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் வெளியான லியோ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தி கோட் (2024) என்ற படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் திரிஷா நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய் அரசியலில் முழுவதுமாக இறங்கவுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் ஜன நாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: அது எனக்கு மகிழ்ச்சியான தொல்லையாக இருந்தது.. ரசிகர்கள் குறித்து தளபதி விஜய் சொன்ன விஷயம்!

இதையடுத்து, நடந்த 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் மூலம் போட்டியிட்ட நிலையில், அதிக டெபாசிட்டுகளை பிடித்து, முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதற்க்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிற்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவர் முதலமைச்சராக பதவியேற்கும் நிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாடே கொண்டாடிவருகிறது.

Follow Us
Related Stories
C. Joseph Vijay: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!
திரிஷா முதல் சங்கீதா வரை.. விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்!
Thalapathy Vijay: அது எனக்கு மகிழ்ச்சியான தொல்லையாக இருந்தது.. ரசிகர்கள் குறித்து தளபதி விஜய் சொன்ன விஷயம்!
Con City: நான் தான் கிங்… அர்ஜுன்தாஸின் கான் சிட்டி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!
Karuppu: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. கருப்பு படம் குறித்து அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
Drishyam 3: மீண்டும் ஒரு பிரச்சனையில் ஜார்ஜ் குட்டி.. வெளியானது மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ பட அதிரடி ட்ரெய்லர்!
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி