Trisha Krishnan : தனுஷின் உண்மையான பெயர்.. திரிஷா கிருஷ்ணன் சொன்ன விஷயம்!
Trisha Krishnan Talk About Dhanush : தமிழ் சினிமாவிவை கடந்து, தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் தனுஷை வேறு பெயர் கொண்டு அழைப்பதாகப் பேசியிருந்தார். அதைப் பற்றை விவரமாகப் பார்க்கலாம்.

தனுஷ் மற்றும் த்ரிஷா
நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். மற்ற நடிகைகளைப் போல இல்லாமல் சுமார் 23 வருடங்களாகத் திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வருகிறார் . இவர் தமிழில் தளபதி விஜய் (Thalpathy Vijay ) முதல் சூர்யா (Suriya) வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1999ம் ஆண்டு வெளியான ஜோடி (Jodi) என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்தப் படத்தை இயக்குநர் பிரவீன்காந் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மூலம் சினிமாவில் நுழைந்த இவருக்கு, முதல் படமாக அமைந்தது மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe). இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதை அடுத்ததாக மனசெல்லாம் , சாமி, லேசா லேசா மற்றும் அலை என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவருக்கு முதல் தெலுங்கு படமாக அமைந்தது வர்ஷம் இயக்குநர் சோபன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது சூப்பர் ஹிட்டாகியது. இதை அடுத்ததாக இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னதாக பேசியிருந்த பேட்டி ஒன்றில் தனுஷை (Dhanush) அவர் வேறு பெயர் சொல்லி அழைப்பதாகக் கூறியிருந்தார் அதைப் பற்றிப் பார்க்கலாம்.
திரிஷா கிருஷ்ணனின் நியூ போட்டோஷூட் :
தனுஷை பற்றி பேசிய த்ரிஷா கிருஷ்ணன் :
அந்த நேர்காணலில் நடிகை திரிஷாவிடம், நடிகர் தனுஷின் போன் எண்ணை எவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை த்ரிஷா, “நான் தனுஷின் நம்பரை எனது போனில் வெறும் ‘D’ என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அவரை நான் எப்போதும் D என்றுதான் கூப்பிடுவேன். மேலும் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘பிரபு’ என்றும் கூப்பிடுவேன். ஏனென்றால் அவரின் உண்மையான பெயர் கூட “வெங்கடேஷ் பிரபு” தானே. அதனால் அவரை நான் அதிகமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபு என்றுதான் கூப்பிடுவேன்” என நடிகர் திரிஷா கிருஷ்ணன் ஓபனாக பேசியிருந்தார்.
தனுஷ் மற்றும் திரிஷா கூட்டணி :
நடிகை திரிஷா நடிகர் தனுஷுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடித்திருக்கிறார். அந்த படம் வேறு எதுவுமில்லை. கடந்த 2016ம் ஆண்டு வெளியான கொடி திரைப்படம்தான். இயக்குநர் ஆர் .எஸ். துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், நடிகர் தனுஷ் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். அரசியல் கதைக்களம் மற்றும் காதல் திரைப்படமாக இப்படமானது வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் நடிகைகள் திரிஷா கிருஷ்ணன் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.