நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு – என்ன காரணம்?
Actor Yash Toxic Movie Release Postponed: கன்னட சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டாக்ஸிக்
கன்னட சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் யாஷ். இவருக்கு கன்னட சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த இவரை பான் இந்திய ஸ்டாராக மாற்றியது கே.ஜி.எஃப் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான கேஜிஎஃப் படத்தி இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு நடிகர் யாஷிற்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ளப் படம் டாக்ஸிக். இயக்குநர் கீது மோகந்தாஸ் இந்தப் படத்தை இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் படத்தை தயாரித்து உள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் வருகின்ற ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அந்தப் படத்தின் ஒத்திவைப்பிற்கு என்ன காரணம் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்.
நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு:
டாக்ஸிக் படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் உருவாக்கிய படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம் உலக அளவில் உள்ள பார்வையாளர்களிடம் சென்றடைய வேண்டும் என்று எடுக்கப்பட்டது. மார்ச் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தெரிவித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். இது ரசிகர்களின் நலனுக்காக செய்யும் விசயம். மேலும் டாக்ஸிக் படம் வருகின்ற ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… லோகேஷ் ஹீரோ ஆகிட்டாரு… நீங்க ஹீரோவா நடிப்பீங்களா? – அனிருத்தின் கியூட் ரிப்ளை
டாக்ஸிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Toxic : A Fairy Tale for Grown-Ups – in Cinemas Worldwide on 4 June 2026 pic.twitter.com/tg28qLUooH
— KVN Productions (@KvnProductions) March 4, 2026