டாக்ஸிக் – துரந்தர் 2 பட ரன்னிங் டைம்.. திரையரங்குகள் சந்திக்கும் சிக்கல்!
Toxic vs Dhurandar 2: பான் இந்திய அளவில் வரும் 2026ம் மார்ச் 19ம் தேதியில் வெளியீட்டிற்காக காத்திருக்கும் திரைப்படங்கள் தான் டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2. இந்த இரு படங்களும் மிக பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் காரணமாக திரையரங்குகளில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுவருகிறது.

டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2
தென்னிந்திய மொழியில் மிகவும் புரபலமான் கதாநாயகனாக நடித்துவருபவர் யாஷ் (Yash). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள படம்தான் டாக்ஸிக் (Toxic). இதில் யாஷ் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் டோவினோ தாமஸ் (Tovino Thomas), நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இப்படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இதன் முதல் பாடலும் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது.
இப்படத்தின் ரிலீஸின்போது வெளியாகும் மற்றொரு பிரம்மாண்ட படம்தான் துரந்தர் 2 (Dhurandar 2). இதில் ரன்வீர் சிங் (Ranveer Singh) கதநாயகனாக நடித்திருக்கும் நிலையில், இது 2025ம் ஆண்டு டிசம்பரில் வெளியான துரந்தர் 1 படத்தின் தொடர்ச்சியாக வெளியாக காத்திருக்கிறது. தற்போது இப்படத்தின் ரன்னிங் டைம் மூலம், திரையரங்குகளில் காட்சி திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!
டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2 திரைப்படத்தின் தன்னிங் டைம் :
நடிகர் யாஷ் நடித்திருக்கும் டாக்ஸிக் படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவந்த நிலையில், இதன் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் அமைந்துள்ளது. அதுபோல நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பில் தயாராகியுள்ள துரந்தர் 2 படமானது கிட்டத்தட்ட 3 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு மேல் படத்தின் ரன்னிங் டைம் இருக்கிறதாம். அந்த வகையில் திரையரங்கில் ஒரு படத்திற்கே கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் நிலையில், திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: போட்டியின் நேரடி ஒளிபரப்பில் கருப்பு பட அப்டேட் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
ஒரு நாளைக்கே கிட்டத்தட்ட 4 காட்சிகள் மட்டும் திரையிட முடியும். இதனால் திரையரங்குகளில் சிக்கல்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. துரந்தர் 1 படமே வெளியாகிமொத்தமாக கிட்டத்தட்ட ரூ 850 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. அதை அடுத்ததாக அதன் பாகம் 2ம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டாக்ஸிக் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இப்படமும் வெற்றிப்படமாக அமையும் என கூறப்படுகிறது.
டாக்ஸிக் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
The sound of Tabaahi 🎼
Out nowKannada https://t.co/sbcnq6OBAZ
Hindi https://t.co/2R2ooS3BUL
Teluguhttps://t.co/oJwHzn6TPB
Tamilhttps://t.co/u37B9DXuUF
Malayalamhttps://t.co/WSNz4VFXM2Video out soon…#Toxic#ToxicOnMarch19th#ToxicTheMovie@TheNameIsYash#Nayanthara…
— KVN Productions (@KvnProductions) March 2, 2026