Pallichattambi: டோவினோ தாமஸ் – கயாடு லோஹரின் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் ரிலீஸ் எப்போது..? வீடியோவுடன் வெளியானது அறிவிப்பு!

Pallichattambi Release Date Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் டோவினோ தாமஸ். இவரின் நடிப்பில் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் பள்ளிச்சட்டம்பி. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Pallichattambi: டோவினோ தாமஸ் - கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ரிலீஸ் எப்போது..? வீடியோவுடன் வெளியானது அறிவிப்பு!

பள்ளிச்சட்டம்பி திரைப்படம்

Published: 

20 Jan 2026 20:17 PM

 IST

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த இவர், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் நரிவேட்டை (Narivetta). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து புது புது படங்களில் நடித்துவந்தார். அதில் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம்தான் பள்ளிச்சட்டம்பி (Pallichattambi). இவர் ஏற்கனவே பிரித்விராஜ் சுகுமாரனின் ஜன கன மன என்ற படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறித்திடத்தக்கது. இந்த பள்ளிச்சட்டம்பி படத்தில் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இவருக்கு தமிழில் இது இரண்டாவது படமாகும்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட வேலைகள் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது. இந்த படமானது வித்தியாசமான திரில்லர் கதையில் தயாராகியுள்ள நிலையில், இடத்ன் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தப் படத்திற்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது – கர பட இயக்குநர் சொன்ன விசயம்

பள்ளிச்சட்டம்பி பட ரிலீஸ் தேதி குறித்து நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த படமானது 20 அல்லது 30 வருடத்திற்கு முன் கேரளாவில் நடக்கும் அதிரடி சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டோவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், சர்ஜித் ரவி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியிருந்தாலும், இதன் கதையை எஸ் சுரேஷ் பாபு என்பவர் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்? வைரலாகும் தகவல்

இப்படம் மிகவும் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள நிலையில், இதன் முதல் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 9ம் தேதியில், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..