AK 64 படத்தின் இணையும் முக்கிய நடிகர்? வைரலாகும் தகவல்

AK 64 Movie Update: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் AK 64. இந்தப் படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

AK 64 படத்தின் இணையும் முக்கிய நடிகர்? வைரலாகும் தகவல்

அஜித்

Published: 

03 Nov 2025 23:33 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமா முழுவதும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் அஜித்குமார் (Actor Ajith Kumar). இவரது நடிப்பில் இதுவரை 63 படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாயகனாக மட்டும் இன்றி ரேசிங்கிலும் கலக்கி வருகிறார் நடிகர் அஜித் குமார். தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஹிட் அடிப்பது போல ரேசிங்கிலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல விருதுகளை வென்று வருகிறார். இது இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் இதனைக் கொண்டாடித் தீர்ப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரேசிங்கில் கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் தற்போது மீண்டும் நடிப்பில் பிசியாக உள்ளார்.

அதன்படி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குமார் AK 64 படத்தின் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட வாய்ப்பு உள்ளது என்றும் நடிகர் அஜித் குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த பேட்டி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக மாற்றும் அளவிற்கு தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

AK 64 படத்தின் இணையும் விஜய் சேதுபதி அல்லது ராகவா லாரன்ஸ்?

அதன்படி இந்த AK 64 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அல்லது ராகவா லாரன்ஸ் இவர்களில் இருந்து யாராவது ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… சியான் 63 படத்தின் விக்ரமிற்கு ஜோடி இந்த நடிகையா? வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நவம்பர் 14-ம் தேதி ரீ ரிலீஸாகும் ஆட்டோகிராஃப் படம் – சேரன் வெளியிட்ட அப்டேட்