பர்த்டே பாய் சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு!

Sigma film crew extends birthday wishes to Sundeep Kishan | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவர் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் சிக்மா படக்குழு வாழ்த்தை தெரிவித்து உள்ளது.

பர்த்டே பாய் சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு!

சந்தீப்

Published: 

07 May 2026 16:15 PM

 IST

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றனார். மேலும் இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன் அவ்வபோது மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில் இறுதியாக நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்த ராயன் படத்தில் அவரது தம்பியா சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் இவர் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் சிக்மா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் கிஷனுக்கு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சிக்மா படக்குழு:

அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் அந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று சிக்மா படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்து உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்

சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்ட்

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..