ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டும் படக்குழு…

Jana Nayagan is targeting the first immediate release after the elections: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் தேர்த்தல் முடிந்த உடனே வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டும் படக்குழு...

ஜன நாயகன்

Published: 

11 Mar 2026 13:08 PM

 IST

தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தப் படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படம் இது என்று குறிப்பிட்டு இருந்ததால் முன்பு விஜய் படத்திற்கு இருக்கும் ஆர்வத்தைவிட இந்த ஜன நாயகன் படத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பொங்கல் பண்டிகையின் போதே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய இந்த ஜன நாயகன் படம் சென்சார் தொடர்பான பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் படத்டின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழு நீதிமன்றத்தை நாடியது. ஆனாலும் சென்சார் தொடர்பான பிரச்னை இழுத்துக்கொண்டே சென்றதை அடுத்து படத்தை ரிவைசிங் கமிட்டுக்கு அனுப்ப படக்குழு திட்டமிடது.

அதன்படி ஜன நாயகன் படத்தை படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய நிலையில் கடந்த 09-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் படத்தை பார்க்க திட்டமிட்டு இருந்தனர். மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்க திட்டமிட்டு இருந்த நிலையில் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் வரவில்லை. அதனால் இந்தப் படத்தினை மற்றொரு நாள் பார்த்துவிட்டு சென்சார் தொடர்பான பதிலளிப்பதாக கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டது.

ஜன நாயகன் படத்தின் ரிலீஸில் தீவிரம் காட்டும் படக்குழு:

இந்த நிலையில் ஜன நாயகன் படத்தினை வெளியிடுவதில் படக்குழு முனைப்பு காட்டி வருதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படத்தினை தேர்தலுக்குப் பிறகு குறிப்பாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு உடனடியாக ஜன நாயகன் படத்தை வெளியிடுவதே படக்குழுவின் இலக்காக உள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தினை ரிவைசிங் கமிட்டி குழு மார்ச் மாதம் 17-ம் தேதி 2026-ம் ஆண்டு அன்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… திருமண கொண்டாட்டங்கள் ஓவர்.. நெக்ஸ்ட் ஷூட்டிங்கிற்கு தயாரான விஜய் தேவரகொண்டா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நேரில் சந்தித்த இயக்குநர் சிஎஸ்அமுதன் – நடிகர் சிவா… வைரலாகும் புகைப்படம்

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..