காஜல் அகர்வாலின் தி இந்தியன் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
The India Story Movie Release Update | பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவரது நடிப்பில் உருவாகி உள்ள தி இந்தியன் ஸ்டோரி படத்தின் வெளியீட்டு தேதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தி இந்தியன் ஸ்டோரி
பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு நாயகியகா அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வார்ல் தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல், கோமாளி மற்றும் இந்தியன் 2 ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகை காஜல் அகர்வாலின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சிக்கந்தர். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தி இந்தியன் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள படம் தி இந்தியன் ஸ்டோரி. இந்தப் படத்தை இயக்குநர் சேத்தன் டிகே எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷ்ரேயஸ் தல்படே முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் வருகின்றது 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டரில் போடாததற்கு இதுதான் காரணம் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு
நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The poison was never in the fields alone. It was in the silence.#TheIndiaStory, Slow Poison in Progress. Coming in cinemas on 24th July 2026
Releasing in 3 languages #Hindi #Tamil #Telugu #IndiasMostShockingTruth@shreyastalpade1 @murlisharma72 @manishwadhwa @DkChettan… pic.twitter.com/P5Ns51vgWq
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) April 27, 2026
Also Read… இன்று முடிவடையுமா ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை? வைரலாகும் தகவல்