ரீ ரிலீஸாகும் அசோக் செல்வனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் – எப்போது தெரியுமா?

Sila Nerangalil Sila Manidhargal: தமிழ் சினிமாவில் பல சிறந்தப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸாகும் அசோக் செல்வனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் - எப்போது தெரியுமா?

சில நேரங்களில் சில மனிதர்கள்

Published: 

18 Sep 2025 16:24 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அசோக் செல்வன் (Actor Ashok Selvan). இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்தப் படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கி இருந்தார். இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து நடிகர்கள் நாசர், கே.மணிகண்டன், அபி ஹாசன், ரெய்யா, கே.எஸ்.ரவிக்குமார், ரித்விகா, அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, பானுப்ரியா, இளவரசு, அனுபமா குமார், ஜார்ஜ் விஜய் நெல்சன், அபிஷேக் குமார், ரிஷிகாந்த், சிவமாறன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரேயா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராதன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரீ ரிலீஸாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் படம்:

அசோக் செல்வன் மற்றும் அவரது தந்தை இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன் காதலிக்கும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகின்றது. இந்த திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க செல்லும் நாசர் ஒரு விபத்தில் உயிரிழந்துவிடுகிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

மனிதர்கள் தெரியாமல் செய்யும் ஒரு தவறால் ஒருவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இந்த நிலையில் இந்தப் படம் மீண்டும் நாளை 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எங்கு எப்போது தெரியுமா? வைரலாகும் அப்டேட்

சில நேரங்களில் சில மனிதர்கள் படக்குழுவின் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் 8 சீசன்களாக தொடர்ந்து வெற்றிபெறும் ஆண் போட்டியாளர்கள் – எந்த மொழியில் தெரியுமா?