வசூலில் சக்கைப்போடு போடும் நிவின் பாலியின் சர்வம் மாயா படம் – வைரலாகும் பதிவு
Sarvam Maya Movie Box Office Collections: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா. இந்தப் படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருவது குறித்து தற்போது பார்க்கலாம்.

சர்வம் மாயா
மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் நிவின் பாலி. இந்தப் படத்தை இயக்குநர் வினித் ஸ்ரீநிவாசன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாகதான் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் நிவின் பாலியின் நடிப்பில் வெளியான படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேம் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகர் நிவின் பாலியின் ரசிகர்கள் பட்டாளம் விரிவடைந்தது என்றே கூறலாம். இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் படம் மற்றும் இணையதள தொடர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வசூலில் ரூபாய் 125 கோடிகளைக் கடந்தது நிவின் பாலியின் சர்வம் மாயா படம்:
அந்த வகையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் பார்மா என்ற இணையதள தொடர் மற்றும் சர்வம் மாயா என்ற படம் ஆகிய இரண்டும் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் குறிப்பாக திரையரங்குகளில் வெளியான சர்வம் மாயா படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி உலக அளவில் சர்வம் மாயா படம் தற்போது உலக அளவில் ரூபாய் 125 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய கானா வினோத் – எத்தனை லட்சம் தெரியுமா?
நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sarvam Maya✨ storms the box office with 125 CRORES worldwide 🌍
.
.#SarvamMaya #SarvamMayaMovie #Akhilsathyan #Fireflyfilms #PrietyMukundhan #AjuVarghese #RiyaShibu pic.twitter.com/fr5VZ1Gi7L— Nivin Pauly (@NivinOfficial) January 11, 2026
Also Read… ஆண் – பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்… இயக்குநர் சுதா கொங்கரா