பல்டி படத்திலிருந்து வெளியானது சாந்தனுவின் க்ளிம்ஸ் வீடியோ!
Balti Movie: தமிழ் சினிமாவில் நடித்து வந்த நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தற்போது மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடிக்கும் பல்டி படத்தில் நடிகர் சாந்தனு நடித்து வருகிறார். இது தொடர்பான க்ளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சாந்தனு
வேட்டிய மடிச்சுக் கட்டு என்ற படத்தின் மூலம் 1998-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் சாந்தனு (Shanthanu). அதனைத் தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் சாந்தனுவிற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு பலப் படங்களில் ஹீரோவாக நடித்தார். படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்பதால் அவரால் தொடர்ந்து நாயகனாக நடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது இரண்டாவது நாயகனாக நடிப்பது என்று தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சாந்தனு தமிழில் இறுதியாக நடித்தப் படம் ப்ளூ ஸ்டார். நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் இவர் இரண்டாவது நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல்டி படத்திலிருந்து வெளியானது சாந்தனுவின் க்ளிம்ஸ் வீடியோ:
இந்த நிலையில் தற்போது மலையாள சினிமாவில் பல்டி என்ற படத்தில் நடிகர் சாந்தனு தற்போது நடித்து வருகிறார். நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடிக்கும் இந்தப் படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் உன்னி சிவலிங்கம் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஷேன் நிகாம் மற்றும் சாந்தனு உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அல்ஃபோன்ஸ் புத்திரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
Also Read… பிரபாஸின் பாகுபலி தி எபிக் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
இந்த நிலையில் நடிகர் சாந்தனுவின் அறிமுக வீடியோவைப் படக்குழு நேற்று 11-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 2025-ல் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேதி இன்னும் இறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Super happy for you da @imKBRshanthnu 🤗❤️❤️#BALTI https://t.co/cnfMx1pipX@SaiAbhyankkar @thinkmusicindia @proyuvraaj @SanthoshTKuruv1 @imKBRshanthnu @binugeorgealex @snakeplantllp @UVCommunication @baltimovie #ബൾട്ടി #பல்டி pic.twitter.com/3VlqEGRMU3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 11, 2025
Also Read… த்ரிஷாவின் சினிமா வளர்ச்சி குறித்து பெருமையாக பேசிய சிம்ரன்!