தியேட்டரில் கெத்து காட்டும் தாய் கிழவி படம்… 25-வது நாளை கொண்டாடும் படக்குழு

Thaai Kizhavi Movie Completes 25 Days In Theatres: நடிகை ராதிகா சரத்குமாரின் வித்யாசமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தாய் கிழவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது.

தியேட்டரில் கெத்து காட்டும் தாய் கிழவி படம்... 25-வது நாளை கொண்டாடும் படக்குழு

தாய் கிழவி

Published: 

23 Mar 2026 13:18 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார் நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி தொடர்ந்து இரண்டாம் கட்ட நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் கதையின் நாயகன்களாக நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. ஒரு கிராமத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த பெண் தன் வாழ்க்கையில் எப்படி எல்லாம் கடினமாக உழைந்து தனது முதுமை காலத்தை மிகவும் கெத்தாக யாருடைய தயவும் இல்லாமல் வாழ்ந்து வந்தார் என்பதை மையமாக வைத்தே இந்தப் படம் உருவாகி உள்ளது. கிரமபுரத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக உருவாக இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமாரின் தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்து போகும் அளவிற்கு படத்தில் அவரது தோற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த தாய் கிழவி படம்: கொண்டாட்டத்தில் படக்குழு!

இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் தமிழ் மொழியில் வெளியான இந்தப் படம் உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தாய் கிழவி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 நாட்களைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திடீரென தனியாக மும்பை செல்லும் விஜய் – இதுதான் காரணமா?

தாய் கிழவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Trisha Krishnan: மணிரத்னம் சார் சொன்ன ஒரு வார்த்தை.. நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தேன் – திரிஷா சொன்ன விஷயம்!

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..