குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி… வைரலாகும் த்ரிஷம் 3 படத்தின் நியூ போஸ்டர்

Drishyam 3 Movie New Poster: மலையாள சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் த்ரிஷ்யம். க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியான படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் மூன்றாவது பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி... வைரலாகும் த்ரிஷம் 3 படத்தின் நியூ போஸ்டர்

த்ரிஷ்யம் 3

Published: 

15 Feb 2026 18:51 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து இவர் நடிக்கும் படங்களின் அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அடுத்ததாக நடிகர் மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் த்ரிஷம் 3. இயக்குநர் ஜீத்து ஜோசஃப் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படங்களை மற்ற மொழிகளில் ரீ மேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இரண்டு பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் வெளியாக உள்ளது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் த்ரிஷம் 3 படத்தின் நியூ போஸ்டர்:

இந்தப் படம் தொடர்பான போஸ்டர்கள் மற்றும் அப்டேட்கள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் த்ரிஷ்யம் படத்தில் வரும் ஜார்ஜ் குட்டி என்ற கதாப்பாத்திரத்தில் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து இருப்பது போன்று புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Youth Movie: டாக்சிக் – துரந்தர் 2 படங்களுடன் மோதும் கென் கருணாஸின் ‘யூத்’ படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… RJ. Balaji: அதற்காக சிவகார்த்திகேயனிடம் நான் மன்னிப்பு கேட்டேன் – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?