அதிரடி படத்தில் டொவினோ தாமஸின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்
Tovino Thomas character in Athiradi Movie: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அதிரடி. இந்தப் படத்தில் டொவினோவின் கதாப்பாத்திரம் என்ன என்று தற்போது வெளியாகி உள்ளது.

டொவினோ தாமஸ்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பிரபுவிண்டே மக்கள் என்ற படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் டொவினோ தாமஸ் பிறகு மலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவருக்கு மலையாள சினிமாவில் மட்டும் ரசிகர்கள் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகர் டொவினோ தாமஸ் 2018-ம் ஆண்டு வெளியான அபியும் அனுவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
அந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதே 2018-ம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இவர் வில்லன் கதாப்பாத்தில் நடித்து இருந்தார். நடிகர் தனுஷிற்கு வில்லனாக நடித்த நடிகர் டொவினோ தாமஸின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமான நடிகராக மாறினார் டொவினோ தாமஸ்.
அதிரடி படத்தில் டொவினோ தாமஸின் கேரக்டர் இதுதான்:
இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அதிரடி படத்தில் நடிகர் டொவினோ தாமஸின் கதாப்பாத்திரம் ஸ்ரீகுட்டன் வெள்ளயானி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. மீண்டும் இணைகிறதா எதற்கும் துணிந்தவன் பட காம்போ?
நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sreekuttan Vellayani from ATHIRADI | Character Poster #2#athiradi #CharacterReveal
A film directed by Arun Anirudhan, produced by Dr. Ananthu S & Basil Joseph, under the banners of #basiljosephentertainment & #drananthuentertainments
Releasing May 14th 2026. pic.twitter.com/roJ78noUQa
— Tovino Thomas (@ttovino) January 18, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவரா? இணையத்தில் கசிந்தது தகவல்