தவெக 3-ம் ஆண்டு விழாவில் சர்ப்ரைஸாக டான்ஸ் ஆடிய விஜய்… வைரலாகும் வீடியோ

Vijay Dance Video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கட்சி ஒன்றை தொடங்கினார். இந்த கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

தவெக 3-ம் ஆண்டு விழாவில் சர்ப்ரைஸாக டான்ஸ் ஆடிய விஜய்... வைரலாகும் வீடியோ

விஜய்

Published: 

02 Feb 2026 13:17 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். தமிழ் சினிமாவில் தன்னை உயர்த்திய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஒன்றை தொடங்கினார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சியின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து தனது கட்சிப் பணிகளிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட உள்ள காரணத்தால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார். அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் தான் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்றுகொண்டு உள்ளது. மேலும் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தவெக 3-ம் ஆண்டு விழாவில் சர்ப்ரைஸாக டான்ஸ் ஆடிய விஜய்:

ஜன நாயகன் படம் வெளியாகாத சோகத்தில் விஜய் ரசிகர்கள் உள்ள நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் பாடல் பாடியுள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர் விஜய் டான்ஸ் ஆடிய வீட்யோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… My Lord: ரிலீஸ் தேதியை லாக் செய்த சசிகுமாரின் ‘மை லார்ட்’ படக்குழு.. வெளியான அறிவிப்பு இதோ!

இணையத்தில் வைரலாகும் விஜய் டான்ஸ் ஆடிய வீடியோ:

Also Read… அபிஷன் ஜீவிந்தின் முதல் படம் மாதிரி இல்லை – வித் லவ் படம் குறித்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேச்சு!

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!