பொங்கல் அன்று ரீ-ரிலீஸாகிறது தளபதி விஜயின் தெறி படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Theri Movie Re Release: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் வெளியாகாமல் தள்ளிப்போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள் தற்போது மீண்டும் ரீ ரிலீஸாகி வருகிறது.

தெறி
தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தெறி. நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இயக்குநர் அட்லி குமார் இந்த தெறி படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, திவ்யா விஜய், ராதிகா சரத்குமார், மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், ஸ்ரீகுமார், மனோபாலா, ஸ்டன் சிவா, குமார் நடராஜன், அய்ரா, நிஹாரிகா, கல்யாணி நடராஜன், சுவாமிநாதன், சுகுந்தன், பிரின்ஸ் நித்திக், சௌந்தரராஜா, சாய் தீனா, பினீஷ் பாஸ்டின், ஆர்.கே. அபினவ், ஆத்மா பேட்ரிக், ஆர்.எஸ்.ஜி.செல்லதுரை, டி.முத்துராஜ், அமிர்தா ஐயர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
பொங்கல் அன்று ரீ-ரிலீஸாகிறது தளபதி விஜயின் தெறி படம்:
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் அனைவரும் மன வருத்தத்தில் இருந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் தற்போது விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தெறி படத்தை வருகின்ற ஜனவரி மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Also Read… பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
ஜனவரி 15 முதல் அகிலமெங்கும்
Thalapathy @actorvijay @Atlee_dir @gvprakash @Samanthaprabhu2 @iamAmyJackson #ThalapathyVijay #Theri #10YearsOfTheri pic.twitter.com/on3Pr30enp
— Kalaippuli S Thanu (@theVcreations) January 10, 2026
Also Read… ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது டூரிஸ்ட் ஃபேமிலி படம்