Jana Nayagan: ஒரு பேரே வரலாறு… வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!

Jana Nayagan 2nd Single: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக தயாராகிவருவதுதான் ஜன நாயகன். இந்த படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியக்க நடித்துவருகிறார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் 2வது பாடலான ஒரு பேரே வரலாறு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jana Nayagan: ஒரு பேரே வரலாறு... வெளியானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட 2வது பாடல்!

ஒரு பேரே வரலாறு பாடல்

Updated On: 

18 Dec 2025 18:40 PM

 IST

தளபதி 69 (Thalapathy 69) என கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படம் என்ற நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் துணிவு போன்ற படத்தை இயக்கிய ஹெச். வினோத் (H. Vinoth) தான் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இந்த படமானது அரசியல் சார்ந்த அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய, ஒரு கமர்சியல் படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக நடிகை பூஜா ஹக்டே (Pooja Hegde) கயல் என்ற வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல கன்னட நிறுவனமான கே .வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் தயாரான நிலையில், “தளபதி கச்சேரி” என்ற பாடல் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது இன்று 2025 டிசம்பர் 18ம் தேதியில், ஜன நாயகன் படத்தின் 2வது பாடலான “ஒரு பேரே வரலாறு” (Oru Pere Varalaaru) என்றார் பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படலானது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீரிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ

ஒரு பேரே வரலாறு பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை அனிருத், விஷால் மிஸ்ரா என இணைந்து பாடியுள்ளனர். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்த இப்பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் :

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதை மலேசியாவில் சென்று பார்ப்பதற்காக அவரின் ரசிகர்கள் பலரும் மலேசியாவிற்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இது விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல நிறுவனம்? வைரலாகும் தகவல்

இதை அடுத்ததாக முழுமையாக அரசியலில் இறங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஒருவேளை அரசியலில் இறங்கிய பின்னும் படங்களில் நடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விரைவில் இது தொடர்பான தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?