Jana Nayagan: இணையத்தை தெறிக்கவிடும் ஜன நாயகன் அப்டேட்.. 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Jana Nayagan Movie 2nd Song: நடிகர் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், ரசிகர்களிடையே பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jana Nayagan: இணையத்தை தெறிக்கவிடும் ஜன நாயகன் அப்டேட்.. 2வது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஜன நாயகன்

Published: 

16 Dec 2025 18:05 PM

 IST

தமிழ் சினிமாவில் உச்ச என ரசிகர்கள் போற்றப்படுபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் வரும் 2026ம் ஆண்டு முதல் முழுமையாக அரசியலில் இறங்குகிறார். இதன் காரணமாக இவர் படங்களில் நடிக்கமாட்டார் என்றும் அறிவித்துள்ளார். அந்த வகையில் இவரின் கடைசி திரைப்படமாக தயாராகிவருவது ஜன நாயகன் (Jana nayagan). இப்படமானது ஆரம்பத்தில் தளபதி69 (Thalapathy 69) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் ஜன நாயகன் என டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில், சிறப்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இதில் இவர் கயல் என்ற வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை மமிதா பைஜூவும் (Mamitha Baiju) மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் (Anirudh)இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் “தளபதி கச்சேரி” வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது. அதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராத நிலையில், தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் FDFS எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

ஜன நாயகன் படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி :

அனிருத்தின் அசத்தல் இசையமைப்பில் இந்த ஜன நாயகன் படமானது ருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகி 1 நாளிலே சுமார் 10 மில்லியன் பார்வைகளை கடந்திருந்தது. அந்த வகையில் குத்தாட்டம் போடவைக்கும் ஜன நாயகன் படத்தின் 2வது பாடல் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த அப்டேட் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சினிமா என்பதே அதுபோலத்தான்.. ரஜினிகாந்த் சாரும் இதுதான் என்னிடம் சொன்னாரு- சரத்குமார் பேச்சு!

ஜன நாயகன் படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

ஜன நாயகனை படத்தின் தமிழக ரிலீஸ் நேரம் எப்போது :

தமிழகத்தைப் பொறுத்தவரை பிரம்மாண்ட நடிகர்களின் படங்கள் முதல் சாதாரண நடிகர்களின் படங்கள் வரை ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுவருகிறது. மேலும் அதிகாலை காட்சிகளை பார்க்கவரும் ரசிகர்களுக்கு விபத்துகள் ஏற்படும் காரணமாக இந்த் முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் காலை 9 மணி முதல் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் இந்திய நேரம் படி காலை 8ம் மணிக்குத்தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்1பி விசாதாரர்களின் கணவன், மனைவிகளை பாதிக்கும் அமெரிக்க அரசின் புதிய விதி - செனட்டர்கள் எதிர்ப்பு
சீன எல்லையில் விபத்துக்குள்ளான லாரி - 21 பேர் பலி
பீகாரில் ரயிலில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு ஆட்டோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த பெண்