அஜித் ரசிகரின் ஆசை.. மறுக்காமல் விஜய் செய்த சுவாரஸ்ய சம்பவம்.. வைரலாகும் வீடியோ!
Vijay And Ajith Fan Moment: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாகவும், அரசியல்வாதியாகவும் இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அரசியல் தொடர்பாக தமிழகம் முழுவதும் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று நாமக்கல்லில் பிரச்சாரத்தின்போது, அஜித் ரசிகர் செய்த செயல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் முன்னணி நடிப்பில் இதுவரை, சினிமாவில் 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை அடுத்ததாக 69வது படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படமானது தயாராகிவருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இந்த படத்தை அடுத்ததாக தளபதி விஜய் முழுவதும் அரசியலில் இறங்கவுள்ளார். இந்நிலையில் அவரின் கட்சி தொடர்பாக தமிழகம் முழுவதும் அரசியல் பிரச்சாரத்தில் (Political campaign) ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று 2025 செப்டம்பர் 27ம் தேதியில் நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் தளபதி விஜய்யிடம் அஜித் ரசிகர் ஒருவர், விஜய் மற்றும் அஜித் இணைந்திருக்கும் புகைப்படத்தை கொடுத்து ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அஜித்துடன் விஜய் இருக்கும் புகைப்படத்தில் தளபதி விஜய் கையெழுத்திட்ட வீடியோவானது தற்போது இணையத்தில் விரலகை வருகிறது.
இதையும் படிங்க : மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!
இணையத்தில் வைரலாகும் தளபதி விஜய் தொடர்பான வீடியோ :
Wow😍🥰#ThalapathyVijay putting his Autobiograh for the frame which has him & #Ajithkumar for a fan🫶♥️pic.twitter.com/Srw5rZbVQ8
— AmuthaBharathi (@CinemaWithAB) September 27, 2025
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் அப்டேட் :
தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாக இந்த ஜன நாயகன் படமானது தயாராகி வருகிறது. இதை ஹெச்.வினோத் இயக்கியுள்ளநிலையில், கே.வி.என்.ப்ரொடக்ன்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது அரசியல், மக்கள் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் விஜய்யின் கதாபாத்திரம் பெயர் தளபதி வெற்றி கொண்டான் என கூறப்படுகிறது.
இதை சுருக்கி ஆங்கிலத்தில் அழைத்தால், TVK என விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார். மேலும் இப்படத்திலிருந்து புதிய அப்டேட் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது என்னவென்றால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்துதான்.
இதையும் படிங்க : யாரோ இவன் யாரோ… ஓர் ஆண்டை நிறைவு செய்த மெய்யழகன் படம்
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜன நாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா வரும் 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் நடைபெறவுள்ளதாம். இது தொடர்பான தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது .