Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடைமுறைக்கு சாத்தியமானது மட்டும் தான் சொல்வோம் – செய்வோம்.. நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்

TVK Leader Vijay Speech: நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், “ நம் ஆட்சியில் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை சாலை வசதி, மின்சாரம், சட்டம் ஒழுங்கு போன்ற விஷயங்களில் சமரசம் இருக்காது என ஏற்கனவே சொன்னதே.” என பேசியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமானது மட்டும் தான் சொல்வோம் – செய்வோம்.. நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்
நாமக்கல்லில் விஜய் பிரச்சார்ம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 Sep 2025 15:35 PM IST

நாமக்கல், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அதனை தொடர்ந்து மூன்றாவது சனிக்கிழமை ஆன இன்று, அதாவது செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஊட்டச்சத்தை வழங்கும் மாவட்டம் நாமக்கல்:

அப்போது நாமக்கல் மாவட்ட மக்களிடம் பேசி அவர், “ தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவு முட்டை கொடுக்கும் முதல் நகரம் நாமக்கல் அதேபோல் தமிழ்நாட்டிற்கு உணர்ச்சி ஊட்டும் மண்ணும் கூட நாமக்கல் தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இந்த வரிகளை எழுதியது நாமக்கல் கவிஞர் என்ன பண்ணுற ராமலிங்கம் பிள்ளைதான் தமிழ்நாடு மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உரிமையாக வழங்கியதும் இதே மண் தான்

அது வேறு யாருமல்ல, சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்புராயன்தான். இடஒதுக்கீட்டை வழங்குவதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கியவரும் இவர்தான்.

“நாமக்கல்லில் இவருக்கு மணிமண்டபம் கட்டுவோம்” என்று வாக்குறுதி கொடுத்தார்களே—செய்தார்களா? வடிவேல் காமெடியில் வருவது போல காலியான பாக்கெட்டை எடுத்துக்காட்டுவது போல் ஒவ்வொரு வாக்குறுதியையும் காலி பாக்கெட்டை காட்ட வேண்டியது தான்!

திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?

‘அதை செய்வோம், இதை செய்வோம்’ என்று சொன்னார்களே, அதை பட்டியலில் பார்ப்போம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் கலன்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் என கூறினர். “கொப்பரை (உலர்ந்த தேங்காய்) தமிழக அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதை இன்றுவரை செய்து முடிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளும், இப்போது ஆளும் கட்சியும் இதை யோசிக்கவே இல்லை.

ஆட்சி அமைந்தால் கிட்னி திருட்டில் தொடர்புடையர்வர்கள் மீது நடவடிக்கை:

திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டணி திரட்டு நாடறிந்த விஷயம். அதில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை விசைத்தறி பெண்கள் குறிவைக்கப்பட்டு இந்த கிட்னி திருட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நம் ஆட்சி அமைந்ததும், யாராக இருந்தாலும் சரி—இந்தக் காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க: பெற்றோர் உஷார்.. பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல்.. பறிபோன பிஞ்சு உயிர்!

நடைமுறைக்கு சாத்தியமானது மட்டும் தான் சொல்வோம் – செய்வோம்:

இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பமே கந்துவட்டி (அதிக வட்டி கடன்) மூலமே. தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தாததால்தான் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம் ஆட்சியில் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை சாலை வசதி, மின்சாரம், சட்டம் ஒழுங்கு போன்ற விஷயங்களில் சமரசம் இருக்காது என ஏற்கனவே சொன்னதே. “விஜய் கேள்வி கேட்கிறார் தவிர, இவர் வந்தால் என்ன செய்வார்?” என கேட்கிறார்கள். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதைத்தான் செய்வோம் என பேசியுள்ளார்.