HBD Thalapathy Vijay: ரசிகர்களின் ரத்தத்தின் ரத்தமே… ஹேப்பி பர்த்டே தளபதி விஜய்!

Thalapathy Vijay: தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அன்புடன் தளபதி என்றும் அழைப்பார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.

HBD Thalapathy Vijay: ரசிகர்களின் ரத்தத்தின் ரத்தமே... ஹேப்பி பர்த்டே தளபதி விஜய்!

தளபதி விஜய்

Published: 

22 Jun 2025 07:00 AM

தமிழ் சினிமாவில் (Kollywood Cinema) நாயகனாக அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்துள்ள விஜயின் (Actor Vijay) சினிமா பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. இயக்குநரின் மகனாக சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் விஜய் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டார். நாயகனாக அறிமுகம் ஆன காலத்தில் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? இவர் படத்தை நாங்க தியேட்டரில் போய் பார்கனுமா என பிரபல பத்திரிக்கை ஒன்று விஜய் குறித்து எழுத்தி இருந்தது. அதே பத்திரிக்கையில் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயின் வாழ்க்கை வரலாறை எழுதும் அளவிற்கு தனது கடின உழைப்பை சினிமாவில் போட்டுள்ளார் நடிகர் விஜய். இதுகுறித்து விஜயின் சித்தி மகனான நடிகர் விக்ராந்த் முன்னதாக ஒரு தொலைக்காட்சியில் நடைப்பெற்ற ரியாலிட்டொ ஷோவில் பங்கேற்றப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற தளபதி விஜய்:

நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த விஜய் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு ரசிகரின் குடும்ப உரிப்பினர்களில் ஒருவராக மாறிவிட்டார். ரேஷன் கார்டில் பெயர் மட்டும் தான் சேர்க்கவில்லை மத்தபடி அவர் எங்கள் அண்ணனாகவும், தம்பியாகவும், மகனாகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவர்களின் பேரன்பைப் பெற்றார் விஜய்.

சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன போது இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் காதல் மற்றும் காமெடியை மையமாக வைத்தே வெளியாகி வந்தது. ஒரு கட்டத்தில் ஃபேமிலி செண்டிமெண்டை கையில் எடுத்த விஜய்க்கு அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில், அப்பா செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், தங்கை செண்டிமெண்ட், தம்பி செண்டிமெண்ட், குழந்தைகள் செண்டிமெண்ட் என விஜய் கையில் எடுத்த இந்த குடும்பப் பின்னணி படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் மாஸ் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு ரசிகர்களின் குடும்பத்தில் ஒருத்தராகவே விஜய் மாறியது குறிப்பிடத்தக்கது.

சினிமா டூ அரசியல்…. தளபதி விஜயின் பயணம்:

தற்போது தமிழ் சினிமாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்த நடிகர்கள் யார் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் அதில் நிச்சயமாக நடிகர் விஜய்க்கு முதல் இடம் என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது ரசிகர்களாக்கிய விஜய் நடிப்பதில் இருந்து விலகி அரசியலில் களம் இறங்க முடிவு செய்தார்.

தளபதி விஜய் அரசியலுக்கு வருவதை மக்கள் வரவேற்கவே செய்தாலும் அவர் நடிப்பதில் இருந்து விலகி தீவிர அரசியலில் கலம் இறங்க உள்ளதாக அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாகவே அமைந்தது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உட்சத்தில் இருக்கும் போது அதனை விட்டுவிட்டு மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.

விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பு தான் நடித்தப் படங்களில் தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசத் தொடங்கினார். இது அவரது அரசில் வருகை குறித்து ரசிகர்களுக்கு அளித்த ஹிண்ட்டாகவே இருந்தது. அப்படி படத்தில் விஜய் பேசிய அரசியல் கருத்துகள் மக்களிடையே நன்கு பதிந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாளைய தீர்ப்பு முதல் ஜன நாயகன் வரை நடிகர் விஜயின் திரைப் பயணம்:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1984 முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய விஜய் நாயகனாக அறிமுகம் ஆனது 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தான். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் மாபெரும் வரவேற்பையே பெற்றது.

நடிகர் விஜயின் நடிப்பில் இதுவரை 68 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக உருவாகி வரும் படம் ஜன நாயகன். இவரது 69-வது படமான இதில் நடிகர் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்த ஜன நாயகன் படம் முழுக்க முழுக்க அரசியல் கருத்துகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஜன நாயகன் படத்தின் படக்குழு நடிகர் விஜயின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் விஜய்க்கு டிவி 9 தமிழ் சார்பாக நாமும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்… ஹேப்பி பர்த்டே ரசிகர்களின் ரத்தத்தின் ரத்தமே தளபதி விஜய்!

விஜய் பிறந்த நாளை கொண்டாடும் ஜன நாயகன் படக்குழு: