ஹீரோவுக்காக கதை எழுதுகிறேன்… புதிய படம் குறித்து லப்பர் பந்து பட இயக்குநர் கொடுத்த அப்டேட்!
Tamizharasan Pachamuthu New Movie Update : தமிழ் சினிமாவில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து. இவரின் இயக்கத்தில் அடுத்த படமானது உருவாகவிருக்கும் நிலையில், அந்த படத்தின் கதை மற்றும் அதன் நடிகர் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். தற்போது அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

தமிழரசன் பச்சமுத்து
தமிழ் சினிமாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லப்பர் பந்து (Labbar Pandhu). இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமான விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து மேலும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்த கதையின் நடிகர் தனுஷ் (Dhanush) நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க : 3 நாட்களில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் வசூல் இவ்வளவா? வைரலாகும் பதிவு:
புதிய திரைப்படம் பற்றி இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு
அந்த நேர்காணலில் இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து, ” என்னுடைய புதிய படத்திற்கான கதையை, அந்த நடிகரைப் பார்த்து, பேசியபிறகுதான் அவருக்காக எழுதியிருக்கிறேன். முதல் படத்தைப் போலத்தான் இப்படத்திற்கும் கதையை எழுதியிருக்கிறேன், ஆனால் ஒரு ஹீரோவிற்கு படம் பண்ணுவதை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன். ஏனென்றால் அந்த ஹீரோவின் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும். நான் எழுதும் கதை, அந்த பிரபல நடிகருக்காக, அவரின் புகழுக்கும், அவரின் நடிப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற தேசிய விருதை வென்ற பார்க்கிங் படக்குழு!
இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசிய வீடியோ :
“I’m writing my Next script after discussing with the actor (#Dhanush) & doing script specially for him, keeping his image🔥. It’ll satisfy both fans & general audience. Writing wise it’ll be better than #LubberPandhu🤝”
– Dir Tamizh pic.twitter.com/7FoTZfgJP8— AmuthaBharathi (@CinemaWithAB) August 3, 2025
லப்பர் பந்து படத்தை ஒப்பிடும்போது, இந்த புதிய படத்திற்கு எனது அதிக உழைப்புகளை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இந்த புதிய படத்தை நடிகர் தனுஷுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.