2016 முதல் 2022 வரை… சிறந்த தமிழ் படங்கள் எது? தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

Film award announcement : தமிழக அரசு சார்பில் 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறந்த தமிழ் படங்களுக்கான விருதுகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகிற பிப்ரவரி 13, 2026 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவிருக்கிறார்.

2016 முதல் 2022 வரை... சிறந்த தமிழ் படங்கள் எது? தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு

ஜெய் பீம் - அசுரன்

Published: 

29 Jan 2026 20:53 PM

 IST

சென்னை, ஜனவரி 29 : தமிழ்நாடு அரசு சார்பில் 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட உள்ள தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், தொலைக்காட்சி விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை ஒரே விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில், பிப்ரவரி 13, 2026 நடைபெறுகிறது. இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), 2016–2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விருதுகளை வழங்க உள்ளார்.

மனிதநேயமும் சமூக விழிப்புணர்வும் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல், மக்களின் தினசரி வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்காகவும், சிறந்த தொடர், சிறந்த நாயகன், சிறந்த நாயகி, வாழ்நாள் சாதனையாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க : Varanasi: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

2016 முதல் 2022 வரை சிறந்த திரைப்படங்கள் எது?

  • 2016 ஆம் ஆண்டு – மாநகரம்
  • 2017 ஆம் ஆண்டு – அறம்
  • 2018 ஆம் ஆண்டு – பரியேறும் பெருமாள்
  • 2019 ஆம் ஆண்டு – அசுரன்
  • 2020 ஆம் ஆண்டு – கூழாங்கல்
  • 2021 ஆம் ஆண்டு – ஜெய்பீம்
  • 2022 ஆம் ஆண்டு – கார்கி

ஆகியவை சிறந்த படத்திற்கான முதலிடத்தை பிடித்துள்ளது.

பரிசுத் தொகை விவரம்

சிறந்த திரைப்படத்திற்கு முதல் பரிசு ரூ. 2 லட்சம் வழங்கப்படவுள்ளது. மேலும், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ. 75,000, சிறப்பு பரிசு ரூ. 75,000 வழங்கப்படவுள்ளது. மேலும், பெண்களை நேர்மறையாக சித்தரிக்கும் படங்களுக்கு சிறப்பு பரிசாக ரூ. 1.25 லட்சம் வழங்கப்படவுள்ளது. மேலும், சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தொலைக்காட்சி விருதுகளிலும் பரிசுத் தொகை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க : ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

சிறந்த நடிகர் – நடிகைகளுக்கு விருது

2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ்,  பார்த்திபன், சூர்யா, ஆர்யா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..