Tamannaah Bhatia: விஜய் டான்ஸ் ஆட ஆரம்பிச்சா.. ஐயோ! – தமன்னா சொன்ன விஷயம்!
Tamannaah About Vijays Dance: பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் தமன்னா பாட்டியா. இவர் தமிழில் புது படத்திலும் நடித்துவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அப்படி என்ன கூறினார்?, என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தமன்னா மற்றும் விஜய்
தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகை தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). இவர் தமிழ் சினிமாவை தொடர்ந்து இந்தி மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். இவர் தமிழில் இறுதியாக இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 (Aranmanai 4)படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது தமிழில் இவருக்கு மீண்டும் சிறந்த வரவேற்பை கொடுத்திருந்தது என்று கூறலாம். இதையடுத்து தற்போது விஷாலுக்கு (Vishal) ஜோடியாக புருஷன் (Purushan) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தையும் இயக்குநர் சுந்தர் சி இயக்கும் நிலையில், ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தை வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.
இதையடுத்ததாக நடிகை தமன்னா பாலிவுட்டில் வெப் சீரிஸ் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கல்யாணி சினிமாவிற்கு வந்தது இப்படிதான்.. ஒரு அப்பாவாக பெருமையாக இருக்கு – பிரியதர்ஷன்!
தளபதி விஜய் குறித்து மேடையில் நடிகை தமன்னா பாட்டியா தெரிவிட்ஸ் விஷயம்:
அந்த நிகழ்ச்சி மேடையில் தமன்னா பேசுகையில், “விஜய் மிகவும் சிம்பிளான நபர். மிகவும் தன்மையானவர், ரொம்பவே அமைதியாக தான் பேசுவாரு. ஆனால் அவரு டான்ஸ் ஆட ஆரம்பிச்சா..? தாங்கமுடியாது. ஜூனியர் என்டிஆர் கூட அவரின் நடனத்தை ஆட முடியாது” என கூறினார். மேலும் அஜித் குமார் குறித்து பேச தொடங்கிய அவர், “அஜித் சார் மிகவும் இனிமையானவர். அவரு எனக்கு இட்லி செஞ்சி தந்துருக்காரு. அஜித் சார் அவரின் கேரவேனில் சாப்பாடு செய்வாரு. அவருக்கு குக்கிங் நா ரொம்பவே பிடிக்கும். எனக்கு அவரின் கேரவேனில் இருந்து சுட சுட இட்லி செஞ்சி தருவாரு” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நடிகை?
நடிகை தமன்னாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை தமன்னா தமிழில் குறைவான படங்களிலே நடித்துவருகிறார். அந்த விதத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் புருஷன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், முதற்கட்ட ஷூட்டிங் முடிந்ததாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷ்ன், காமெடி மற்றும் கலக்கல் கதையில் தயாராகிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.