Suriya: ‘கப்பு முக்கியம் பிகிலே’.. விஜய் ரசிகர்களிடையே வைரலாகும் சூர்யாவின் வீடியோ!
Suriyas Viral Video: தென்னிந்திய சினிமாவில் சிறந்த கதாநாயகனாக திரைப்படங்களில் கலக்கிவருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் சென்னை சிங்கம் என்ற கிரிக்கெட் அணியின் விளம்பரம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தளபதி விஜய்யின் பட டயலாக்கை பேசிய நிலையில், அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

விஜய் மற்றும் சூர்யா
நடிகர் சூர்யா (Suriya) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த நிலையில், சூர்யா இணைந்து தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 2025 மே மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக கருப்பு (Kruppu), சூர்யா46 (Suriya46) மற்றும் சூர்யா 47 போன்ற படங்ககளையும் தன்வசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா, தனது 47வது படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்க, சூர்யா தயாரித்துவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் 2026 பொங்கல் பண்டியையை அடுத்து தொடங்கவுள்ளதாம். மேலும் சமீபத்தில் சென்னை சிங்கம் (Chennai Singam) என்ற கிரிக்கெட் அணியின் விளம்பர வீடியோ ஒன்றை சூர்யா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) படத்தின் வசனம் ஒன்றை பேசியிருந்த நிலையில், இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது- ஜன நாயகன் பட சென்சார் குறித்து பா.ரஞ்சித் பதிவு!
நடிகர் சூர்யா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு :
இந்த பதிவில் சென்னை சிங்கம் என்ற கிரிக்கெட் அணியுடன் இருக்கும் நடிகர் சூர்யா “கப்பு முக்கியம் பிகிலே” என்ற தளபதி விஜய்யின் பிகில் படத்தின் பிரபல டயலாக்கை பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் பலரும் அந்த வீடியோவின் கீழ் சூர்யாவும் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என கருத்துக்கள் குவிந்துவருகிறது.
சூர்யாவின் நடிப்பில் 2026ல் வெளியாகும் படங்கள் :
இந்த 2026ல் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதில் முதலாவதாக ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவான கருப்பு என்ற படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சூர்யா சரவணன் என்ற வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் கடவுள் மற்றும் அதிரடி ஆக்ஷ்ன் போன்ற கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது டூரிஸ்ட் ஃபேமிலி படம்
இப்படம் 2026 ஜனவரி 23ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதன்படி பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையயடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தயாராகியுள்ள சூர்யா46 என்ற படமும் உருவாகியுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தை முன்னிட்டு வெளியாகும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.