சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

17 Years Of Vaaranam Aayiram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இதுவரை 44 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

வாரண ஆயிரம் படம்

Updated On: 

14 Nov 2025 12:54 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 14-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வாரணம் ஆயிரம். ரொமாண்டிக் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி இருந்த இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா (Actor Suriya) அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இதில் அப்பா சூர்யாவின் ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சமீரா, ரம்யா, தீபா நரேந்திரன், லாஸ்யா, பப்லு பிரிதிவீராஜ், கார்த்திக், அகங்ஷா மிதா, ஜெயஸ்ரீ, டேனி, இந்திரன், தீனதயாளன், கௌதம் வாசுதேவ் மேனன், கணேஷ், கணேஷ், ரவி, ராஜீவன், சங்கர் கொளந்தி, ஸ்வேதா, சதீஷ், வீர பாகு, ஆதித்யா, அமிதாஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

வாரணம் ஆயிரம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாரணம் ஆயிரம் படத்தின் கதை என்ன?

நடிகர்கள் சூர்யா மற்றும் சிம்ரன் இருவரும் 1970களில் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்துகொள்வார்கள். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் இருப்பார்கள். அதன்படி அப்பா மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களிலும் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். மிகவும் மகிழ்ச்சியான மிடில் கிளாஸ் குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்தனர்.

Also Read… ஒவ்வொரு நிழலும் ஒரு கதையை மறைக்கிறது… வெளியானது மம்முட்டியின் மாஸ் நடிப்பில் கலம்காவல் படத்தின் ட்ரெய்லர்

இப்படி இருக்கும் சூழலில் அப்பா சூர்யா தனது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் மகன் சூர்யா ட்ரெய்னில் நடிகை சமீரா ரெட்டியைப் பார்க்கிறார். பார்த்த உடனே காதல் ஏற்படுகிறது. அவரை துறத்தி துறத்தி காதலிக்கிறார். தனது காதலை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்காவில் உள்ள சமீராவைப் பார்க்க செல்வார் சூர்யா. இதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாக சமீரா ஒரு குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து போதைக்கு அடிமையாகிறார் மகன் சூர்யா. அவர் அந்த போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டாரா இல்லையா? அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… மழைக்கு கோரிக்கை வைத்த நடிகர் ஆர்யா… வைரலாகும் போஸ்ட்!