வெய்ட் இஸ் ஓவர்… இன்று மாலை வெளியாகிறது சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்
Vishwanath and Sons Movie Teaser Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகரக்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று மாலை படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வதாக உருவாகி உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் வெளியீட்டு அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்தப் படத்திற்கு அடுத்ததாக நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வெங்கி அட்லூரி வலம் வரும் நிலையில் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் நாக் வம்சி தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை வெளியாகிறது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர்:
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசரை இன்று மார்ச் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு மாலை 04.06 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜன நாயகன் மற்றும் கருப்பு படத்தின் நிலமை என்ன? ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A journey filled with heart. ❤️
The teaser of #VishwanathAndSons is on its way.🥳Sanjay Vishwanath arrives on March 16th @ 04:06 PM! 😎
In cinemas from this JULY 2026. 🤩@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli… pic.twitter.com/FKoOht3Oz0
— Sithara Entertainments (@SitharaEnts) March 14, 2026
Also Read… எனது மற்ற படங்களை விட அரசன் பட ஷூட்டிங் விரைவில் முடியும் – இயக்குநர் வெற்றிமாறன்