நடிகர் ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா

Sharwanand's Biker movie Tamil teaser : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷர்வானந்த். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள பைக்கர் படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

Published: 

23 Mar 2026 19:33 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடிகராக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ஷர்வானந்த். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் ஷர்வானந்த் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் படங்களிலும் அவ்வபோது நடித்து வந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்த நடிகர் தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான 2011-ம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடிகர் ஷர்வானந்த் நடித்த போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஷர்வானந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது முற்றிலும் உடல் எடை குறைத்து பைக் ரேஸிங்க் பயற்சியை மேற்கொண்டு தற்போது பைக்கர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஷர்வானந்தின் பைக்கர் படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா:

நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் டாக்டர் ராஜசேகர், மால்விகா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் அபிலாஷ் ரெட்டி எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் பைக் ரேஸிங் பற்றி அமைந்துள்ளது டீசரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழ் ட்ரெய்லரைப் நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஜய் சேதுபதி டூ விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடி.. இந்த சிறுமி யாருனு தெரியுமா?

நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… RJ Balaji: கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் நிச்சயம் பவர்ஃபுல்லாக இருக்கும் – ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..