Suraj Venjaramoodu: ரஜினிகாந்த் சார் எனது கதாபாத்திரத்தை பாராட்டினார் – சுராஜ் வெஞ்சாரமூடு!

Suraj Venjaramoodu About Rajinikanth: மலையாளம் சினிமாவின் மூலம் நடிகராக நுழைந்து, தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ள நிலையில், தனது முதல் தமிழ் படத்தை பார்த்த ரஜினிகாந்த், பாராட்டியது குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தெரிவித்துள்ளார்.

Suraj Venjaramoodu: ரஜினிகாந்த் சார் எனது கதாபாத்திரத்தை பாராட்டினார் - சுராஜ் வெஞ்சாரமூடு!

ரஜினிகாந்த் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு

Updated On: 

13 Mar 2026 11:05 AM

 IST

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu). இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் முக்கிய வேடங்களில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2) என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) கதாநாயகனாக நடிக்க, முக்கிய வில்லன் வேடத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை தந்தது என்றே கூறலாம். இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக ஜெயிலர் 2 (Jailer 2), கர (Kara), யூத் (Youth) போன்ற அடுத்தடுத்த தமிழ் படங்களில் ஒப்பந்தமானார். மேலும் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள டெக்ஸ்லா (Texla) படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கென் கருணாஸ் இயக்கத்தில், இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம்தான் யூத். இதன் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு, ரஜினிகாந்த் (Rajinikanth) தன்னை பாராட்டியது பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

ரஜினிகாந்த் தன்னை பாராட்டி பேசியது குறித்து தெரிவித்த சுராஜ் வெஞ்சாரமூடு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சார்மூடு அதில், “ரஜினிகாந்த் சார் என்னிடம் நிறைய விஷயங்கள் பேசிருக்காரு. மேலும் அவர் நானா நடித்த வீர தீர சூரன் 2 படத்தை பார்த்திருக்கிறார். அந்த படம் மிகவும் நன்றாக இருந்தது என்றும், அதில் எனது கதாபாத்திரம் நன்றாக இருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்” என அதில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எனக்கும் அந்த மாதிரி படம் நடிக்கவேண்டும் என அதிக ஆசை.. ஆனால் – கென் கருணாஸ் ஓபன் டாக்!

ரஜினிகாந்த் குறித்து சுராஜ் வெஞ்சாரமூடு பேசியது பற்றிய எக்ஸ் பதிவு:

நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவின் நடிப்பில் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் யூத் என்ற படம் வெளியாகிறது. இதை கென் கருணாஸ் இயக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் கென் கருணாஸின் தந்தையாக சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளார். இப்படத்தை அடுத்தாக தனுஷின் கர, ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெய் நடிக்கும் டெக்ஸ்லா படத்திலும் அவரின் தந்தையாக சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாள சினிமாவை ஒப்பிடும்போது இவருக்கு தமிழில் அதிக படங்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Trisha Krishnan: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!
OTT Release: இந்த வீக் எண்டில் ஓடிடியில் குவியும் திரைப்படங்கள்.. எந்த படத்தை நீங்கள் பார்க்கப்போறிங்க?
Kenatha kanom Review: தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்.. யோகி பாபுவின் கெணத்த காணோம் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
Anushka Shetty: திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய அனுஷ்கா ஷெட்டி.. யாரை திருமணம் செய்கிறார் தெரியுமா?
Heartin: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!
Rashmika Mandanna: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..