Rajinikanth : ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த்தின் சம்பளம் இத்தனை கோடியா?

Rajinikanth salary in Coolie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் 2025, ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Rajinikanth : கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினிகாந்த்

Published: 

10 Aug 2025 23:40 PM

தளபதி விஜய்யின் லியோ (Leo) திரைபடத்தை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருக்கும் படம் கூலி (Coolie). இப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெளியீட்டிற்கு முன்னே டிக்கெட் புக்கிங்கில் சுமார் ரூ 11 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம். இந்த படத்தில் ரஜினியுடன், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan), நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஆமிர் கான், உபேந்திரா மற்றும் சத்யராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படமானது முற்றிலும் ஹை பட்ஜெட் படமாக உருவாகியுள்ளதாம். சுமார் ரூ 355 கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிப்பதற்கு சுமார் ரூ 150 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டிக்கெட் ரூ 2000-மா? ரசிகர்கள் அதிர்ச்சி!

கூலி படத்தின் கதாபாத்திரங்கள் பெயர் அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு :

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பதற்காக மட்டும், சுமார் ரூ. 150 கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்த படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து சுமார் 8 பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் மோனிகா என்ற பாடல் தற்போது வரையிலும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இப்பாடலுக்கு நடனமாட அவர் சுமார் ரூ.3 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கூலி படத்தில் ரஜினியின் இளமை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்? கேமியோ ரோலில் இவரா?

ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் :

இந்த கூலி படமானது கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் அதிரடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த்தும் தேவா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், “பல வருடமாக ரஜினி சாரின் நடிப்பில் மறந்துபோன விஷயங்களும் இந்த கூலி படத்தில் இருக்கிறது. மேலும் இந்த படத்தில் வன்முறை காட்சிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு சென்சார் குழு “ஏ”  சான்றிதழை கொடுத்துள்ளது. இதனால் இந்த் படத்தை 18 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மட்டுமே திரையரங்களுக்கு சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.