Cinema Rewind: அஜித்துக்கு வந்த சோதனை.. சுந்தர் சி பகிர்ந்த சம்பவம்!

Sundar C Talk About Ajith Kumar Back Injury : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் சுந்தர் சி. இவர் சினிமாவில் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித் பட்ட கஷ்டம் பற்றி பேசியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

Cinema Rewind: அஜித்துக்கு வந்த சோதனை.. சுந்தர் சி பகிர்ந்த சம்பவம்!

சுந்தர் சி

Published: 

28 Aug 2025 08:43 AM

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் சுந்தர் சி (Sundar C). சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து, படங்களில் நடிகராகவும் நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் இயக்கத்தில் அஜித் குமார் (Ajith kumar)  முதல் கமல்ஹாசன் (Kamal Haasan) வரை பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட முன்னணி இயக்குநராக இன்று வரையிலும் இருந்து வருகிறார். இவ்வாறு இயக்குநர் சுந்தர் சி முன்னணி நடிகராகவும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 1999ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்த திரைப்படம்தான் உன்னைத்தேடி (Unnai Thedi) . இந்த படத்தில் அஜித் குமார் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா (Malavika) நடித்திருந்தார். இந்தப் படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.

கடந்த 1999ம் ஆண்ட வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம் . இப்படத்தில் அஜித் குமாருடன் நடிகர்கள் மாளவிகா, விவேக், ஸ்ரீவித்யா, கரண் மற்றும் சிவகுமார் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அஜித் குமார் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான படமாக இது அமைந்திருந்தது.

இந்த திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். இந்நிலையில் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சுந்தர் சி, உன்னைத்தேடி படத்தில் நடிக்கும்போதுதான் அஜித் குமாருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை இருந்ததாகக் கூறியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

அஜித் குமார் முதுகு தண்டுவட பிரச்சனை பற்றி பேசினாய் சுந்தர் சி :

அந்த நேர்காணலில் பேசிய சுந்தர் சி, “உன்னைத்தேடி திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் அஜித் குமாருக்கு முதுகுத் தண்டு பிரச்சனை ஆரம்பித்து. அப்போது அந்த படத்தின் பாடல்கள் ஷூட் செய்வதற்காக நியூசிலாந்து சென்றிருந்தோம். அங்கு சுமார் 15 நாட்கள் ஷூட்டிங் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு விமானத்தில் செல்லும்போதுதான் அஜித் குமார், முதுகுத் தண்டு பிரச்சனையைப் பற்றிச் சொன்னார். அவர் அப்போது என்னிடம், “சுந்தர் சி, எனக்கு இவ்வாறு முதுகுத்தண்டு பிரச்சனை இருக்கிறது, டாக்டர் நிச்சயமாக ஆபரேஷன் செய்யச்சொல்லிவிட்டார், அவர் எனக்கு தேதி குறித்திருக்கிறார்.

அந்த டாக்டர் விரைவில் ஓய்வு பெறவுள்ளார். அதன் காரணமாக இந்த 15 நாள் ஷூட்டிங்கை, 7 நாட்களில் எனது காட்சிகளை முடித்தால் நன்றாக இருக்கும். அதை முடித்தும் நான் சீக்கிரம் அறுவைச் சிகிச்சைக்குச் செல்வேன். ஒருவேளை இந்த அறுவை சிகிச்சை தவறாக முடிந்தால், அவ்வளவுதான் படுத்தப்படுகையாகிவிடுவேன். அதன் காரணமாக ஷூட்டிங்கை சீக்கிரம் முடித்துக் கொடுங்கள், நான் இந்தியா செல்லவேண்டும்” என அஜித் குமார் என்னிடம் கூறினார். அந்த கஷ்டத்திலும் அஜித் குமார் உன்னைத்தேடி திரைப்படத்தின் பாடல்களுக்கு நடனமாடிக் கொடுத்திருந்தார்” எனச் சுந்தர் சி ஓபனாக பேசியிருந்தார்