வின்னர் படம் இப்படிதான் உருவாச்சு – சுந்தர் சி சொன்ன சுவாரஸ்ய கதை
Director Sundar C: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் படம் எப்படி உருவானது என்பது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் சுந்தர் சி கூறியது தற்போது வைரலாகி வருகின்றது.

வின்னர் படம்
தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வின்னர். இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கிரண் ரத்தோட் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, எம்.என். நம்பியார், விஜயகுமார், எம்.என்.ராஜம், ரியாஸ் கான், ராஜ் கபூர், ஜெய முரளி, பிரதாப் சிங், விமல்ராஜ், அனுராதா, சந்தான பாரதி, கிரேன் மனோகர், போண்டா மணி, முத்துகாளை, இளைய பாலையா, விச்சு விஸ்வநாத், சிங்கமுத்து, ஹல்வா வாசு, பாரதி, தளபதி தினேஷ், வத்சலா ராஜகோபால், சண்முகசுந்தரி, நிரோஷா, நெல்லை சிவா, கோட்டை பெருமாள், செல்லதுரை, பாவா லட்சுமணன், மாஸ்டர் பரத், மாஸ்டர் உதயராஜ், சூரி, ஆர்த்தி அகர்வால் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சுதன் எஸ். ராமச்சந்திரன் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வின்னர் படத்தின் கதையை தெலுங்கு படங்களில் இருந்து காப்பியடித்தேன்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் சுந்தர் சி வின்னர் படத்தின் கதையை எப்படி உருவாக்கினார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் தெலுங்கு சினிமாவில் என்னுடைய படத்தின் கதையை காப்பியடித்தனர். அது அங்கு நல்ல ஹிட் அடித்தது. அப்போதான் நான் முடிவு பண்ணினேன் என் படத்தையா காப்பி அடிக்கிறீங்க நானும் உங்க படத்தை காப்பி அடிக்கிறேன்னு முடிவு பண்ணேன்.
Also Read… வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!
அதன்படி நீங்க என்னோட ஒரு படத்தை தான காப்பி அடிச்சீங்க. நான் உங்களோட மூன்று படத்தை காப்பியடிக்கிறேன்னு மூனு தெலுங்கு படத்தை காப்பி அடிச்சுதான் இந்த வின்னர் படத்தை இயக்கினேன். நான் பிரசாந்திற்கு அந்த மூன்று படத்தோட சீடி கொடுத்து இந்த 3 படத்தில இருக்க கதைதான் நாம எடுக்கப் போறோம் என்று சொன்னேன் என்றும் சுந்தர் சி அந்தப் பேட்டியில் கூறியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சூர்யாவின் கருப்பு படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!