மீண்டும் இணைந்தது சுந்தர் சி – விஷால் கூட்டணி… அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Sundar C and Vishal: நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர்கள் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுந்தர் சி மற்றும் விஷால்
கோலிவுட் சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் சுந்தர் சி (Director Sundar C). இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல இவர் நாயகனாக நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருகிறார் சுந்தர் சி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை இயக்கி உள்ளார். அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாமன், உள்ளத்தை அள்ளிதா, மேட்டுகுடி, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கிரி, ஆம்பள, கலகலப்பு முதல் பாகம் மற்று இரண்டாம் பாகம், அரண்மனை படத்தின் 4 பாகங்கள், மத கஜ ராஜா மற்றும் கேங்கர்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தொடர்ந்து ஆம்பள, ஆக்ஷன் மற்றும் மத கஜ ராஜா ஆகிய மூன்று படங்களிலும் நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கூட்டணி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 4-வது முறையாக இந்த கூட்டணி அமைய உள்ளது.
மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி:
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் கூட்டணி குறித்த தகவல்கள் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் சுந்தர் சி மற்றும் விஷாலின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது குறித்து விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்
விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The unstoppable BLOCKBUSTER combo is BACK !https://t.co/HU7gHJmi0o #Vishal #SundarC #MassHero #MassDirector #MassEntertainer #BlockbusterCombo #Vishal36@VishalKOfficial @khushsundar pic.twitter.com/tV4iUZV3qo
— Vishal Film Factory (@VffVishal) November 3, 2025