Sreeleela: அந்த நடிகைதான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்து பேசிய ஸ்ரீலீலா!

Sreeleela About Her Role Model Actress: இளம் நாயகியாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீலீலா. இவர் சமீபத்தில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் அவரின் ரோல் மாடலான தமிழ் நடிகை யார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த நடிகை யார் என்பது குறித்து பார்க்கலாம்.

Sreeleela: அந்த நடிகைதான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்து பேசிய ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா

Updated On: 

11 May 2026 15:25 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் இளம் நாயகியாக படங்களில் நடித்துவருபவர் ஸ்ரீலீலா (Sreeleela). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழில் இவருக்கு முதல் அறிமுக திரைப்படமாக அமைந்தது பராசக்தி (Parasakthi). கடந்த 2026 ஜனவரியில் இந்த திரைப்படமானது வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். இது இவரின் முதல் படம் என்றாலும், தானே இப்படத்திற்கு டப் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது தனுஷிற்கு ஜோடியாக டி55 (D55) படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi) நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய ஸ்ரீலீலா, தனக்கு பிடித்த தமிழ் நடிகை மற்றும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: டோவினோ தாமஸ் – நஸ்ரியா ஜோடியாகும் புது படம்.. டைட்டில் என்ன தெரியுமா?

தனது ரோல் மாடலான நடிகை குறித்து ஸ்ரீலீலா பேசிய விஷயம்:

அதில் ஸ்ரீலீலா பேசுகையில், “எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் அது நயன்தாரா அக்காதான், அவர் எனக்கு முன்னோடி போல, எனக்கு அவர்தான் ஒரு ரோல் மாடலாக நான் பார்க்கிறேன். அவர் மிக மிக அன்பானவரும் கூட, சென்னை பசங்களை பற்றி சொல்லவேண்டும் என்றால், அன்பானவர்கள், இனிமையனவர்கள், ஆனால் அவர்களை பற்றி தெரிந்துகொள்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது” என அதில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: இரவும் பகலும் உழைக்கும் உங்கள் அன்பு.. நயன்தாராவிற்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!

நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை ஸ்ரீலீலா தற்போது தனுஷிற்கு ஜோடியாக டி55 படத்தில் நடித்துவருகிறார். இதை அமரன் படத்தை இயக்கியிருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் நிலையில், நடிகை சாய் பல்லவியும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துவருகிறார். ஆக மொத்தத்தில் இப்படத்தில் இரு நடிகைகள். இப்படமானது ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருவதாகவும், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்தவரும் நிலையில், இப்படத்தில் லவ் மற்றும் நடனமாடும்படியான பாடல்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி