விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?

Director H vinoth: இயக்குநர் எச்.வினோத் தற்போது நடிகர் விஜயின் இறுதிப் படமான ஜன நாயகன் படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணியில் பிசியாக இருக்கும் இயக்குநர் எச்.வினோத் இதனைத் தொடர்ந்து அடுத்து எந்த நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?

இயக்குநர் எச்.வினோத்

Updated On: 

09 Jun 2025 17:39 PM

தமிழ் சினிமாவில் இயக்குநர் எச்.வினோத் (Director H vinoth) இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சதுரங்க வேட்டை. இந்தப் படத்தின் மூலமாக இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மூட நம்பிக்கையினாலும், வாழ்க்கையில் மிகவும் சீக்கிரமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது. நடிகர் நட்டி நடராஜன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இஷாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு, பிறைசூடன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இன்றும் சமூகத்தில் நிலவும் பல ஏமாற்றங்களை இந்தப் படத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் இயக்குநர் எச்.வினோத்.

இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான படங்கள்:

சதுரங்க வேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் எச். வினோத் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, நடிகர் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து 3 படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இறுதியாக வெளியான துணிவு படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் தற்போது இயக்குநர் எச். வினோத் தளபதி விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியாகும் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷை இயக்கும் இயக்குநர் எச்.வினோத்?

இயக்குநர் எச். வினோத் ஜன நாயகன் படத்தை தொடர்ந்து எந்த நடிகரின் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் எச். வினோத் அடுத்ததாக நடிகர் தனுஷின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.