சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்… என்னனு தெரியுமா?
Suriya 47 Movie Update: தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. மேலும் இவரது நடிப்பில் வெளியாக உள்ள படங்களில் இருந்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.

சூர்யா 47
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவது நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி உள்ள படம் கருப்பு.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு கருப்பு படம் நிச்சயமாக திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா அவரது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.
சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்:
இந்த நிலையில் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர் ஜித்து மாதவனுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் சூர்யா தற்போது தொடங்கியுள்ள ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து மலையாள சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி சூர்யா 47 படத்தில் இரண்டு மலையாளப் பாடல்கள் இடம்பெற உள்ளது. அதில் ஒன்று மலையாளம் கலந்த பாடல், மற்றொன்று முழுவதும் மலையாளப் பாடலாக உள்ளது. இந்தப் பாடல்கள் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் வெளியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… தள்ளிப்போன ஜன நாயகன்… ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்கள்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Exclusive…!
There will be two malayalam song’s in #Suriya47
One is a malayalam mixed song and one is a pure malayalam song
A sushin shyam musical 😮💨🔥
All the songs from S47 is going to be trending whole nation #Suriya #Karuppu #Suriya46 pic.twitter.com/GNix1MaLw4
— Manoj (@Manojoffl_) January 10, 2026
Also Read… பாடல்களை படங்களில் பயன்படுத்த மட்டுமே அனுமதி… இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சி