சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
Chiyaan 63 Movie Update: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நடிகராக இருக்கிறார் நடிகர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாக உள்ள 63-வது படம் குறித்த அப்டேட் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சியான் 63
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சியான் விக்ரம். இவர் சினிமாவில் முதலில் பின்னணி குரல் கொடுப்பவராகவே பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் சீரியர்களில் நடித்து வந்த நடிகர் விக்ரம் பின்பு சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. குறிப்பாக இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டுவது மற்றும் குறைப்பது என்று நடிகர் விக்ரமின் மெனக்கெடல்களைப் பார்த்து ரசிகர்கள் பிரமித்துப்போவதும் உண்டு.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் படம். இந்தப் படத்தை இயக்குநர் அருண் குமார் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள 63-வது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டது.
சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?
அதன்படி நடிகர் விக்ரமின் சியான் 63 படத்தினை அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார் இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் கீழ் பிரபல தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது டெலீட்டட் சீன் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The shooting of #Chiyaan63 begins in FEB.
— This film is directed by debutant director #BodiKRajkumar.
— Action Thriller Film loading 🌀
— This will be #ChiyaanVikram‘s comeback film. pic.twitter.com/nt1LSes8d3— Movie Tamil (@_MovieTamil) January 22, 2026
Also Read… திரௌபதி 2 படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டது படக்குழு