பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் வைல்கார்ட் போட்டியாளர்களாக வரும் பிரபல ஜோடி? வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil season 9 Wildcard: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி தற்போது 17 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் வைல்ட்கார்ட் இருக்கும் என்று நிகழ்ச்சி குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் உள்ளே செல்லும் போட்டியாளர்களின் பட்டியள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது போல வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக யார் உள்ளே செல்கிறார்கள் என்பது குறித்த தகவலும் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. சில சீசன்களில் முதலாவது நாளில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களைவிட வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக உள்ளே வரும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதில் மிகவும் சீக்கிரமாக இடம்பிடித்தது உண்டு. அது மட்டும் இன்றி வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக மாறினார் சின்னத்திரை நடிகை அர்ச்சனா. இப்படி வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளே நுழைந்தாலும் அவர்கள் இறுதிப் போட்டி வரை சென்று டைட்டில் வின்னராகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்பது நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரம் நடைப்பெற்று வருகின்றது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து வீட்டில் சண்டைகள் வெடித்து வருகின்றது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனை ரசிகர்கள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் போட்டியாளர்கலின் தேர்வும் மக்களிடையே தொடர்ந்து விமர்சனத்தைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸிற்கு வரும் ரியல் ஜோடி:
இந்த நிலையில் இந்தப் போட்டியில் மூன்றாவது வாரமே வைல்ட்கார்ட் என்ட்ரி இருக்கும் என்பது குறித்து சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வீடியோ வெளியிட்டு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் போட்டியில் தற்போது வைல்கார்ட் போட்டியாளராக பிரபல ஜோடி பிரஜின் – சாண்ட்ரா பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டிற்குள் செல்ல உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது இந்த வார இறுதியிலேயே தெரியவரும்.
Also Read… அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடிக்க முதலில் ஒத்துக்கவே இல்லை – இயக்குநர் மிஷ்கின்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
புதுவரவுகள் இருக்கணும்-ல Bigg Boss Season 9 Wild Card Entry – விரைவில்
Bigg Boss Tamil Season 9 – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9… pic.twitter.com/gJAo4oheYy
— Vijay Television (@vijaytelevision) October 22, 2025
Also Read… வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!